Idly Kadai : தனுஷின் குரலில்.. இட்லி கடை படத்தின் முதல் பாடல் ‘என்ன சுகம்’ வெளியீடு!
Idly Kadai Movie First Single : நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் படம் இட்லி கடை. இப்படமானது வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இட்லி கடை படக்குழு இப்படத்தின் முதல் பாடலான, என்ன சுகம் என்ற பாடலை வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் சுவேதா மோகன் பாடிய இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தனுஷின் இட்லி கடை படம்
பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவர் திரைப்படங்களில் நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku en mel ennadi kobam) என்ற படம் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் உருவாகியிருக்கும் திரைப்படம் இட்லி கடை (Idly Kadai). இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்துள்ளார். இந்த ஜோடி ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகினர். அதை அடுத்ததாக இந்த இட்லி கடை படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாளை 2025, ஜூலை 28ம் தேதியில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால், அதை முன்னிட்டு இட்லி கடை படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் பாடகி ஸ்வேதா மோகனின் குரலில், “என்ன சுகம்” (Enna Sugam) என்ற பாடல் இப்படத்திலிருந்து வெளியாகியுள்ளது. காதல் மெலோடி பாடலாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : துல்கர் சல்மானின் பிறந்தநாளில் வெளியாகும் ‘காந்தா’ பட டீசர்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!
இட்லி கடை படத்தில் முதல் பாடல் ரிலீஸ் பதிவு :
A melody that is sure to mesmerize you ❤️#EnnaSugam – First single from #IdliKadai out now
▶️ :- https://t.co/zSfkUyiqpv
A @gvprakash musical 🎶
Sung by @dhanushkraja and @shwetamohan@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran… pic.twitter.com/xqvnbAwRmU— DawnPictures (@DawnPicturesOff) July 27, 2025
இட்லி கடை படத்தின் நடிகர்கள் :
இப்படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், இப்படத்தில் மேலும் நடிகர்கள் பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் அருண் விஜய், ராஜ் கிரண், ஷாலினி பாண்டே மற்றும் நடிகர் சமுத்திரக்கனி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகர் அருண் விஜய் கிக் பாக்ஸராக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷும் இப்படத்தின் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!
இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படமானது வரும் 2025, அக்டோபர் 1 தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளியான குபேரா படமானது தமிழில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த இட்லி கடை படமானது நிச்சயமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.