என் கணவர் எப்டியாது ஜெயிக்கணும்னு உருகுற மனசு தான் கடவுள் – தனுஷ் பேச்சு
Dhanush Speech At Kara Movie Event Viral On Social Media: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தின் பிரியூ ஷோ நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களிடையே மட்டும் இன்றி மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக இயக்கிய போர் தொழில் படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இயக்கி உள்ள கர படமும் வெற்றியடையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் முன்னதாக தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
என் கணவர் எப்டியாது ஜெயிக்கணும்னு உருகுற மனசு தான் கடவுள்:
அதன்படி நடிகர் தனுஷ் பேசியதாவது, இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் மனைவி கரசாமியை ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது போல நோட்டில் 1001 முறை எழுதியுள்ளார். தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ் சொன்னதாவது, தலைப்பு கர, ஆனால் நீங்கள் எழுதியது கரசாமி என்று கேட்டேன். அதற்கு விக்னேஷ் ராஜாவின் மனைவி சொன்னதாவது, ஆனால் என் கணவர் எப்டியாது ஜெயிக்கணும்னு சொன்னார். ஆம் கணவர் ஜெயிக்கனும்னு உருகுற மனசு தான் கடவுள். என்னம் போல் வாழ்கை சகோதரி என்று நடிகர் தனுஷ் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அஜித் – ஷாலினி திருமண நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள்… வைரலாகும் புகைப்படம்
இணையத்தில் கவனம் பெறும் தனுஷின் பேச்சு:
#Dhanush: Vignesh Raja’s wife wrote Karasamy 1001 times in a notebook like Sri rama jeyam.. He said, “The title is Kara, but you wrote Karasamy..” But En husband epdiyadhu jeichaganum nu urugura manasu dhan kadavul..❣️ Ennam Pol Vaazhkai sister..🤝 pic.twitter.com/4za0jzbtnu
— Laxmi Kanth (@iammoviebuff007) April 27, 2026
Also Read… மே மாதத்தில் வெளியீட்டை திட்டமிடும் ஜன நாயகன் படக்குழு – வைரலாகும் தகவல்