Dhanush: காதல் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?.. ரசிகரின் கேள்விக்கு பதிலை கொடுத்த தனுஷ்!

Dhanush About love: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் விரைவில் தேரே இஷ்க் மே என்ற படமானது வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், காதல் என்பது தனக்கு எப்படிப்பட்ட விஷயம் என தெரிவித்துள்ளார்.

Dhanush: காதல் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?.. ரசிகரின் கேள்விக்கு பதிலை கொடுத்த தனுஷ்!

தனுஷ்

Published: 

15 Nov 2025 13:09 PM

 IST

நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவை கடந்து மற்றமொழி படங்ககளிலும் நடித்து மேலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்தியில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தனுஷின் ராஞ்சனா திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் (Anand L Rai) தான் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 3-வது படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படத்தில் தனுஷ் மற்றும் கிருதி சனோன் (Kriti Sanon) இணைந்து ன்மடித்துள்ளனர். இந்த படமானது அதிரடி மற்றும் ஆக்ஷ்ன் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று 2025 நவம்பர் 13ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றிருந்த நிலையில், அதில் தனுஷிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதையே தேர்வுசெய்கிறார்… நானாக இருந்தால்- ராஷ்மிகாவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

காதல் என்றால் என்ன என்பதற்கு தனுஷ் அளித்த பதில் :

தேரே இஷ்க் மே படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் தனுஷிடம் ரசிகர் ஒருவர், “உங்களுக்கு காதல் என்றால் என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி கேட்டார், அதற்கு பதிலளித்த தனுஷ், “காதல் என்றால் எனக்கு தெரியாது” என முதலில் கூறினார். அதற்கு அருகிலிருந்த நடிகை கிருதி சனோன் சிரித்துக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எனக்கு அப்பா மாதிரி.. எமோஷனலாக பேசிய தனுஷ்!

மேலும் பேசிய தனுஷ், “காதல் என்றால், இது இன்னொரு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று நான் நினைக்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார். இந்த பதிலை தனுஷ் சொன்னதுமே அரங்கமே அலறியது. அங்கிருந்த தனுஷ் ரசிகர்கள் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தேரே இஷ்க் மே பட நிகழ்ச்சியில் காதல் குறித்து தனுஷ் பேசிய வீடியோ பதிவு :

தனுஷ் இந்த தேரே இஷ்க் மே திரைப்படத்தில் ஒரு விமானப்படை வீரராக நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் இப்படத்தில் சங்கர் என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி கல்லூரி மாணவனாக இருந்த இவர், எவ்வாறு விமானப்படை வீரனாகவும் மற்றும் தனது காதலை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படமானது தனுஷின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. மேலும் பல மாநாடுகளுக்கு பின் தனுஷ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், அவரின் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related Stories
Kaantha: பறக்கும் பாசிடிவ் விமர்சனம்… துல்கர் சல்மான்- பாக்யஸ்ரீ போர்ஸின் காந்தா பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
அருள்நிதி – மம்தா மோகன்தாஸின் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Bigg Boss : குப்பை தொட்டியில் என்ன இருக்குனு ஆராய்ச்சி பண்றங்க… ரெட் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி!
Kamal Haasan: சுந்தர் சி-யின் கருத்து… எனது நட்சத்திரம் விரும்பும் கதையை எடுப்பதுதான் எனக்கு நன்மை – கமல்ஹாசன் பேச்சு!
ஒரே பொண்ணு பொண்ணு.. வாட்டர்மெலான் ஸ்டார் காதல் தொல்லை… பிக்பாஸ் வீட்டில் அரோரா வைத்த கோரிக்கை!
விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதையே தேர்வுசெய்கிறார்… நானாக இருந்தால்- ராஷ்மிகாவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா!