படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்… ஓடிடியை சாடிய குபேரா படத்தின் தயாரிப்பாளர்

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் குபேரா. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஓடிடி நிறுவனங்கள் கொடுக்கும் நெறுக்கடிகளை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்... ஓடிடியை சாடிய குபேரா படத்தின் தயாரிப்பாளர்

குபேரா

Updated On: 

10 Jun 2025 12:16 PM

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்தப் படம் வருகின்ற ஜூன் மாத்ம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படதில் நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், படத்தின் வெளியீட்டிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஓடிடி நிறுவனங்கள் குறித்து குபேரா தயாரிப்பாளர் குற்றச்சாட்டு:

படங்களை தயாரித்து அதன் வெளியீட்டு தேதியை நாம் முடிவு செய்வதை விட ஓடிடி நிறுவனங்களின் நெருக்கடியால் தான் வெளியீடு தேதிகள் முடிவு செய்கிறது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி சுனில் நரங் பேசியதாவது, குபேரா படத்தின் வெளியீட்டிற்காக ஜூன் மாதத்தில் ஒரு தேதியை ஓடிடியிடம் கேட்டோம்.

அவர்கள் ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தனர். அப்படி அவர்கள் கூறுகின்ற தேதியில் வெளியிடவில்லை என்றால் ஓடிடி உரிமைக்காக பேசப்பட்ட தொகையில் இருந்து 10 கோடி ரூபாய் குறைத்துவிடுவோம் என்றும் மிரட்டியதாகவும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஓடிடி நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ளதா திரைத்துறை?

இந்த மாதிரியான குற்றச்சாட்டு வருவது முதல் முறை அல்ல. முன்பு எல்லாம் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு அந்தப் படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றது. ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக ஓடிடி உரிமைகள் விற்கப்படுகின்றது. இதனால் படத்தின் வெளியீட்டில் நெறுக்கடி ஏற்படுகின்றது என்றே கூறலாம்.

அது மட்டும் இன்றி முன்னதாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரெட்ரோ படத்துடன் போட்டிப் போட்டது. அப்போது படக்குழுவினரிடம் ஏன் பெரிய நடிகரின் படத்துடன் போட்டி போடுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது ஓடிடி நிறுவனத்தின் நெறுக்கடியால் படத்தை உடனே வெளியிடவேண்டிய கட்டாயம் என்று அவர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.