குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்

Kubera Movie Trailer Update: நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த நிலையில் குபேரா படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... உற்சாகத்தில் ரசிகர்கள்

குபேரா

Published: 

11 Jun 2025 21:53 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் குபேரா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியைப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இயக்குநர் சேகர் கம்முலா (Director Sekhar Kammula) இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக தெலுங்கு சினிமாவில் இயக்கிய ஃபிதா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இது தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே, தலிப் தஹில், திவ்யா டிகேட், சவுரவ் குரானா, கௌஷிக் மஹதா, ஹரீஷ் பெராடி, கர்னல் ரவி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

இந்த நிலையில் குபேரா படம் வருகின்ற 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

பிச்சைக்காரராக நடிக்கும் நடிகர் தனுஷ்:

நடிகர் தனுஷ் இந்த குபேரா படத்தில் பிச்சைக்காரராக நடிப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நேற்று ஜூன் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு மும்பையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியது இணையத்தில் வைரலானது. மேலும் இந்தப் படத்தில் தனது கடுமையான உழைப்பை அவர் போட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இட்லி கடை படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் தனுஷ்:

ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடிக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் என பலர் நடித்துள்ளனர். படம் முன்னதாக ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையி படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதில் தாமதம் ஆனதால் குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து படம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!