இட்லி கடை படத்தின் கதை அந்த பிரபலத்தின் பயோ பிக்கா? இணையத்தில் வைரலாகும் செய்தி
Idli Kadai Movie: வருகின்ற அக்டோபர் மாதம் நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் பிரபலம் ஒருவரின் வாழ்க்கை வரலாறை தான் இந்தப் படத்தில் தனுஷ் எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இட்லி கடை
நடிகர் தனுஷ் (Actor Dhanush) அவரது 52-வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இட்லி கடை (Idli Kadai Movie) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், அருண் விஜய், ராஜ் கிரண், ஷாலிணி பாண்டே, சமுத்திரகனி, சத்யராஜ், கீதா கைலாசம் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அடுத்தடுத்து சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடைப்பெற்றது. இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு ட்ரெய்லர் கோயம்புத்தூரில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் தனுஷ் தான் ஏன் இந்தப் படத்தை இயக்கியதாக பல சுவாரஸ்யமான சம்பவங்களை பேசினார். உணவிற்கும் அவரது வாழ்க்கைக்கும் இடையே உள்ள பந்தம் குறித்தும் அதனால் தான் தனது படங்களில் அவர் தொடர்ந்து உணவு தொடர்பான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்து இருந்தார். மேலும் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு பக்கம் வேறு ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறுதான் இந்த இட்லி கடை படத்தின் கதை என்று தெரிவித்து வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறா இட்லி கடை படம்?
இந்த நிலையில் இட்லி கடை படத்தில் வரும் காட்சிகளை பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் அது இவரின் வாழ்க்கை வரலற்று படம் தான் என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் இது மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகவில்லை என்பதை தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு மக்களுக்கு இது புரியும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read… நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி