D 54 படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Actor Dhanush: நடிகர் தனுஷ் தற்போது அவரது 54-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் என்ற ஊரில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

D 54 படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தனுஷ்

Published: 

06 Nov 2025 19:31 PM

 IST

கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை சென்று தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் அறிமுகம் ஆன போது இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று பல நெகட்டிவான விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பல நெகட்டிவான விமர்சனத்தைப் பெற்ற இவர் தான் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தினார். நெகட்டிவ் விமர்சனத்தை அளித்த பலரும் வாயடைத்து போகும் அளவிற்கு தனது நடிப்பு திறமையால் தற்போது உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார் தனுஷ். நடிப்பு மட்டும் இன்றி இயக்குநராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் நடிகர் தனுஷ். இவர் கை வைத்த இடம் எல்லாம் பொன்னாக மாறும் என்பது போல எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார் நடிகர் தனுஷ்.

அப்படி இருக்கும் சூழலில் நடிகர் தனுஷ் அவரே இயக்கி நாயகனாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் இட்லி கடை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக அவரது 54-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

D 54 படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்:

இட்லி கடை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அவரது 54-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் பகுதியில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் அந்தப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷ் செல்வதை வீடியோ எடுத்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் இணையத்தில் வீடியோ வைரலாகி வருகின்றது.

Also Read… பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடிய மாரி செல்வராஜ்

D 54 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கை சிறப்பாக செய்த சாண்ட்ரா… கண்ணீர் விட்ட விக்கல்ஸ் விக்ரம்

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?