AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இன்றும் கொட்டப்போகுது மழை.. சென்னை நிலவரம் என்ன?.. வானிலை மையம் எச்சரிக்கை!!

Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வட கடலோர தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசவுகரியம் ஏற்படாலம்.

தமிழகத்தில் இன்றும் கொட்டப்போகுது மழை.. சென்னை நிலவரம் என்ன?.. வானிலை மையம் எச்சரிக்கை!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Apr 2026 06:36 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா, தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக கூறியுள்ளது. இதன் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாத இடையில் இருந்து கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வானிலை சற்று மாறியது. குறிப்பாக நேற்றைய தினம் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கோடை வெயிலுக்கு நடுவே பெய்த இந்த மழை வெப்பத்தைக் குறைப்பதாகவே இருந்ததால், மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

இதையும் படிக்க: சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு உச்சபட்ச தண்டனை!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (ஏப்ரல் 7) தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

ஏப்ரல் 8ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 9ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 10ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 11ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பகுதிகளில் வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வட கடலோர தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசவுகரியம் ஏற்படாலம்.

இதையும் படிக்க: திருமாவளவனுக்கு திமுக கூட்டணி அளித்த சிறப்பான பரிசு… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us