Devayani: காதலுக்கு எந்த காரணமும் தேவை இல்ல.. தனது காதல் பற்றி தேவயானி பகிர்ந்த விஷயம்!
Devayani About Her Love Story:தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தேவயானி. 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வந்தவர். இவர் தனது காதல் கதையை பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

ராஜகுமாரன் மற்றும் தேவயானி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தேவயானி (Devayani). இவர் கடந்த 1993 ஆண்டு பெங்காலி மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தி வந்தார். இவருக்கு தென்னிந்தியாவில் முதன் முதலில் நடித்த திரைப்படம், “கின்னரிபுழயோரம்” (Kinnaripuzhayoram) என்ற மலையாள திரைப்படம்தான். இந்த படத்தைத் தொடர்ந்து இவருக்கு, தமிழ் மொழியிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இவருக்கு தமிழில் முதல் திரைப்படமாக அமைந்தது, தொட்டா சிணுங்கி. இந்த படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சரத்குமார் (Sarathkumar) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். பின் இவர் இயக்குநர் ராஜகுமாரன் (Rajakumaran) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு இவர், தற்போது படங்களில் அம்மா மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக 3BHK என்ற படமானது வெளியானது. இந்த படமானது நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய தேவயானி, தனது காதல் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : குஷி படத்தின் கதை சொல்லும்போது விஜய் சாரின் ரியாக்ஷன் இதுதான் – எஸ்.ஜே. சூர்யா சொன்ன விஷயம்!
நடிகை தேவயானியின் இன்ஸ்டாகிராம் பதிவு:
தனது காதல் குறித்து தேவயானி பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில், கணவர் ராஜகுமாரனுடன் தேவயானி பேசியிருந்தார். அதில் இயக்குநர் ராஜகுமாரன், என்னை உங்களுக்கு பிடித்தது எப்படி ? என்று தேவயானியிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தேவயானி ,”அதற்கு காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை, பிடித்திருந்தது அவ்ளோதான். லவ்ல காரணங்கள் இருந்தால், அது லவ் இல்லை. காதலுக்கு எந்தவித காரணமும் இல்லை. மேலும் முதலில் எனக்கு ராஜகுமாரனை பிடித்த காரணம், அவரின் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தகத்து. மிகவும் மரியாதையுடன் இருப்பார் மற்றும் எல்லாரிடமும் மரியாதையாக பேசுவார்.
இதையும் படிங்க : விஷால் பார்ப்பதற்குத்தான் டீசென்ட், ஆனால்… நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!
அதனால் அவரை எனக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. மேலும் அவரிடம் எந்தவித கெட்ட பழக்கங்களும் கிடையாது, மது பழக்கம் போன்றவைகள் எல்லாம் எனக்கும் மிகவும் வெறுப்பைத்தான் கொடுக்கும். அவரிடம் அந்த மாதிரியான குணம் இல்லை. இது போல் நிறைய நல்ல குணங்கள் இருப்பதால் ராஜகுமாரனை எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது” என்று நடிகை தேவயானி அந்த நேர்காணலில் ஓபனாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியல் மீண்டும் வைரலாகி வருகிறது.