Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jiiva: விஷால் பார்ப்பதற்குத்தான் டீசென்ட், ஆனால்… நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!

Jiiva About Vishal: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஜீவா. இவர் தற்போது தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய ஜீவா, நடிகர் விஷாலை பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அது பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Jiiva: விஷால் பார்ப்பதற்குத்தான் டீசென்ட், ஆனால்… நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!
விஷால் மற்றும் ஜீவாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 21 Sep 2025 08:30 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகி இருப்பவர் ஆர்.பி. சௌத்ரி (R.B. Chowdhury). இவரின் மகனும், நடிகருமான  ஜீவா (JIiva) தனது தந்தை தயாரித்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக நுழைந்தார். கடந்த 2003ல் வெளியான “ஆசை ஆசையாய்” (Aasai Aasaiyai) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து, தற்போது வரையிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் அகத்தியா (Aghathiyaa). இயக்குநர் பா. விஜய்யின் (Pa. Vijay) இயக்கத்தில் வெளியான இப்படமானது இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை.

இந்த படத்தை அடுத்ததாக ஜீவா46 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய ஜீவா, நடிகர் விஷால் பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவர் என்ன பேசினார் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : 2026 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தனுஷின் குபேரா.. ரசிகர்கள் ஹேப்பி!

விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ஜீவா

அந்த நேர்காணலில் நடிகர் ஜீவா நடிகர் விஷால் மற்றும் ஆர்யா பற்றி பேசியிருந்தார். அதில் அவர், “விஷால் பார்ப்பதற்குத்தான் பயங்கர டீசெண்டாக இருப்பார், நாம் பார்க்கும்போது சிரித்துக்கொண்டே சாதாரணமாக இருப்பார். ஆனால் அவர் மிகவும் டேன்ஜரானவர். நடிகர் ஆர்யாவை விடவும் பெரிய ஆள் அவரு. ஆர்யாவை விடவும் மிகவும் ரொமாண்டிக்கான நபர் விஷால்.

இதையும் படிங்க : மீண்டும் நெட்பிளிக்ஸில் வெளியான ‘குட் பேட் அக்லி’… படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

விஷாலை பற்றி நிறைய சொல்வதற்கு இருக்கிறது, ஆனால் சொன்னால் நன்றாக இருக்காது” என நடிகர் ஜீவா அந்த நேர்காணலில் பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஷால் மற்றும் ஜீவா இடையேயான நட்பு குறித்து அவரது பேட்டி மிகவும் தெளிவாக சொல்கிறது.

நடிகர் ஜீவாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Jiiva (@actorjiiva)

நடிகர் ஜீவாவின் புதிய படம்

நடிகர் ஜீவா, இயக்குநர் கே.ஜி. பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா46 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜீவா மற்றும் இயக்குநர் கே.ஜி. பாலசுப்பிரமணி இவரின் கூட்டணியில் ஏற்கனவே பிளாக் என்ற படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும், இந்த் கூட்டணியானது ஜீவா46 படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.