தமிழில் ரீ மேக் செய்யப்படும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் – ஆர்.கே.சுரேஷ் சொன்ன அப்டேட்

Court: State vs a Nobody Telugu Movie Re Made in Tamil: தெலுங்கு சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி. இந்தப் படம் தற்போது தமிழில் ரீ மேக் ஆக உள்ளது.

தமிழில் ரீ மேக் செய்யப்படும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் - ஆர்.கே.சுரேஷ் சொன்ன அப்டேட்

கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி

Published: 

18 Mar 2026 11:55 AM

 IST

சமீப காலமாக சினிமாவில் அந்த அந்த மொழிகளில் வெளியாகும் படங்கள் மட்டும் இன்றி மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டும் இன்றி அந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்றால் அதனை கொண்டாடவும் ரசிகர்கள் தவறியதில்லை என்பதே குறிப்பிடத்தக்கது. அப்படி ரசிகர்கள் கொண்டாடி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தான் கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி. தெலுங்கு சினிமாவில் வெளியான இந்தப் படம் தெலுங்கு சினிமா ரசிகரக்ளிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி படம்.

இந்தப் படத்தை இயக்குநர் ராம் ஜெகதீஸ் எழுதி இயக்கி இருந்தார். இது ராம் ஜெகதீஸ் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறுப்பிடத்தக்கது. பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக போடப்பட்ட போக்சோ சட்டத்தை பலர் எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தப் படம் வெளிப்படையாக பேசி இருந்தது. இதன் காரணமாகவே படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழில் ரீமேக் செய்யப்படும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தப் படம்:

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி படத்தை தற்போது தமிழ் சினிமாவில் ரீ மேக் செய்ய உள்ளது. சமீபத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, தற்போது நான் ‘கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி’ படத்தின் தெலுங்கு மறுஆக்கத்தை செய்து வருகிறேன். இந்தப் படத்தில் பிரசாந்த், சத்யராஜ் சார் மற்றும் நான் ஆகியோர் நடித்து வருகிறோம். நான், கௌதம் ராம் கார்த்திக், கதாநாயகனாகவும் மூன்று படங்களில் நடித்து வருகிறேன் என்று தெரிவித்து இருந்தார். அது தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இன்று ஜன நாயகன் படத்தைப் பார்க்கும் ரிவைசிங் கமிட்டி?

இணையத்தில் வைரலாகும் அர்.கே.சுரேஷின் பேட்டி:

Also Read… Vijay Sethupathi: ‘தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது சார்..! – நடிகர் விஜய் சேதுபதி பேச்சு!

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி