படம் நல்லா இல்லனாலும் பெரிய நடிகர் நடிச்சா கமர்ஷியல் படம் ஹிட் அடிக்கும் – லோகேஷ் கனகராஜ்!

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சில யூடியூப் சேனலகளுக்கு பேட்டி அளித்தார். அதில் தான் தற்போது இயக்கி வரும் கூலி படத்தைப் பற்றி பல விசயங்களை பகிர்ந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பொதுவாக சினிமா குறித்தும் பல கருத்துகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.

படம் நல்லா இல்லனாலும் பெரிய நடிகர் நடிச்சா கமர்ஷியல் படம் ஹிட் அடிக்கும் - லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்

Published: 

27 Jul 2025 17:21 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில் படம் குறித்த அப்டேட்களையும் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

இந்தப் படத்தின் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படம் குறித்தும் கூலி படத்தை எடுக்க தான் எவ்வளவு சிரமத்தை சந்தித்ததாகவும், மேலும் கூலி படத்தில் நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேட்டிகளில் பேசியது இணையத்தில் வெளியாகி தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தது.

கதையே நல்லா இல்லைனாலும் பெரிய நடிகர் நடிச்சா படம் பாஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கு:

இந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் பேசியதாவது, வணிகப் படங்கள் நட்சத்திர மதிப்பு மற்றும் இயக்குனரைப் பொறுத்து வெற்றி பெறும் & படம் நன்றாக இல்லாவிட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் எப்படியும் வெற்றி பெறும்.

கூலிக்கு நிச்சயமாக ரசிகர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். நீங்கள் செலவழிக்கும் பணத்தை விட இது மதிப்புமிக்கதாக இருக்கும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர்… ஆனால் அது விஜய் இல்லை!

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பேச்சு:

Also Read… அமேசானில் காணக் கிடைக்கும் குபேரா படம்… தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணம் என்ன?

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?