Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dude : பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தில் கேமியோ ரோலில் பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

Pradeep Ranganathan Dude Movie Update : தமிழில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் டியூட். நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முன்னணி நடிப்பில் இப்படமானது உருவாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வரும் நிலையில், இப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் சிறப்பு ரோலில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Dude : பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தில் கேமியோ ரோலில்  பிரபல நடிகர்.. யார் தெரியுமா?
டியூட் திரைப்படகுழுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Jul 2025 21:00 PM

சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் வெளியான கோமாளி (Comali) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த இவர், தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவரும் நிலையில், இவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் டியூட் (Dude). இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் (Keerthiswaran) இயக்கி வருகிறார். இவர் சூரரைப்போற்று படத்தில் பணியாற்றிய, இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் ஆவார். இந்த டியூட் திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இப்படத்திலிருந்து, புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் இந்த டியூட் படத்தில் தமிழ் பிரபல நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் வேறு யாருமில்லை நடிகர் சிவகார்த்திகேயன்தான் (Sivakarthikeyan). இவர் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இணையத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரதீப் ரங்கநாதனும் இணைந்து பைக்கில் செல்லும்படியான வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்… டியூட் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

டியூட் படத்தின் புதிய போஸ்டர் பதிவு :

டியூட் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :

இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகிவரும் படம் டியூட். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் ஹிருது ஹூரன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் தொடக்கத்தில் ஆரம்பமானது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கனது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சூர்யாவின் ‘கருப்பு’ படம்… ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

இந்த புதிய படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இப்படமானது வரும் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்துப் படக்குழு அறிவித்திருந்தாலும், இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் ரிலீசிற்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.