பாகிஸ்தானின் கண்காணிப்பில் சல்மான் கான்? வெளியான அதிர்ச்சி தகவல் – நடந்தது என்ன?
Salman Khan : சமீபத்தில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பேசிய சல்மான் கான், பாகிஸ்தான் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. இதனையடுத்து அவர் பாகிஸ்தானின் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சல்மான் கான்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (Salman Khan ) தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் (Pakistan) தனது ஃபோர்த் ஷெட்யூல் (Fourth Schedule) எனப்படும் கண்காணிப்பு பட்டியலில் சல்மான் கானை சேர்த்ததாக பரவும் தகவல் பலரிடமும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. சல்மான் கான் தற்போது ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் தான் இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சர்ச்சை எவ்வாறு தொடங்கியது?
நடிகர் சல்மான் கான் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பு குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், இங்கு பல நாடுகளில் இருந்து மக்கள் வேலை பார்க்கிறார்கள். குறிப்பாக பலுசிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் என அனைத்து நாடு மக்களும் இங்கு வந்து பணி புரிகிறார்கள் என்றார். இந்த நிலையில் அவர் பலுசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து விலகியதாக அவர் கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பாகிஸ்தானில் அரசியல் அரங்கில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : பிக்பாஸில் தரமான சம்பவம் செய்த விஜய் சேதுபதி… பாராட்டும் ரசிகர்கள்!
வைரலாகும் ஆவணம் உண்மையா?
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும், அக்டோபர் 16, 2025 தேதி குறிப்பிடப்பட்ட ஒரு ஆவணம், சல்மான் கானை பலுசிஸ்தான் விடுதலையை ஆதரிப்பவர் எனக் குறிப்பிட்டு, ஃபோர்த் ஷெட்யூல் எனப்படும் கண்காணிப்பில் சேர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. மேலும், பாகிஸ்தானில் உள்ளஊடகங்கள் கூட இதை பற்றிய செய்தியை வெளியிடவில்லை. வெளியான ஆவணத்தின் உள்ள எழுத்து, கையெழுத்துகள் ஆகியவை முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது.
Fourth Schedule என்பதன் பொருள் என்ன?
பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் நபர்கள் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு பயணக் கட்டுப்பாடு, வங்கி சோதனை, தீவிர கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் சல்மான் கானுக்கு இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : Salman Khan: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கலாய்த்த சல்மான்கான்!
சிலர் சல்மான் கானின் பேச்சை அரசியல் நோக்கத்துடன் திரித்து பரப்புவதாக விளக்கம் அளித்தனர். மற்றவர்கள் இந்திய பிரபலங்களின் ஒவ்வொரு சொல்லும் சர்வதேச தாக்கத்தை உருவாக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.