10 நாட்களில் உலக அளவில் பைசன் படம் வசூலித்தது எவ்வளவு? அப்டேட் இதோ
Bison Movie Box Office Collection: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தின் 10 நாள் வசூல் குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது.

பைசன் படம்
இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கத்தில் 5-வது படமாக கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 4 படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த பைசன் காளமாடன் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிக்க மிகவும் பாடுபட்டு வந்த நடிகர் துருவ் விக்ரமிற்கு இந்தப் படம் ஒரு சிறப்பான இடத்தைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் போட்ட உழைப்பு மற்றும் நடிப்பை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
ஸ்போர்ஸ்ட் ட்ராமா பாணியில் வெளியாகியுள்ள இந்த பைசன் காளமாடன் படம் மனத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அந்த கபடி வீரராகதான் நடிகர் துருவ் விக்ரம் நடித்து இருந்தார். இந்தப் படத்திற்காக சுமார் 2.5 வருடங்களாக நடிகர் துருவ் விக்ரம் திருநெல்வேலியில் தங்கி முறையாக கபடி கற்றுக்கொண்டது மட்டும் இன்றி அந்த மக்களுடன் இணைந்து அவர்களுடன் ஒருவராக வாழ்ந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிகவும் இயல்பாக இருந்தது. ரசிகர்களுக்கும் துருவ் விக்ரமின் நடிப்பு பிடித்துப்போனது.
உலக அளவில் ரூபாய் 55 கோடிகளை வசூலித்த பைசன் படம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான பைசன் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் இன்றுடன் 10 நாட்களை நிறைவு செய்துள்ளது. அதன்படி உலக அளவில் பைசன் காளமாடன் படம் 10 நாட்களில் எவ்வள்வு வசூலித்துள்ளது என்பது குறித்து படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி படம் ரூபாய் 55 கோடிகள் வசூலித்துள்ளதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் தகவல்
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Ecstatic beyond measure and thankful beyond words!! #BisonKaalamaadan is unstoppable as he’s breaking those barriers right away!!💥🦬
55 Crores Worldwide in 10 days!! #Blockbuster Raid in the Theatres Near You! 💥💥💥@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal… pic.twitter.com/ozbbqRLl7S
— Mari Selvaraj (@mari_selvaraj) October 27, 2025
Also Read… மகாராஜா படத்தில் நடிக்க தேர்வானது இப்படிதான் – நடிகர் நட்டி நடராஜன் ஓபன் டாக்