பிக்பாஸ் கொளுத்திப்போட்ட டாஸ்க்… சரவெடியாய் வெடிக்கும் போட்டியாளர்கள்

Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்றுடன் அரண்மனை டாஸ்க் முடிவடைந்த நிலையில் புதிதாக ஒரு டாஸ்கை பிக்பாஸ் இன்று வழங்கியுள்ளார். அதன்படி வீட்டில் உள்ளவர்களுக்கு ரேங்கிங் அடிப்படையில் தேர்வு செய்ய கூறுகிறார்.

பிக்பாஸ் கொளுத்திப்போட்ட டாஸ்க்... சரவெடியாய் வெடிக்கும் போட்டியாளர்கள்

பிக்பாஸ்

Published: 

13 Nov 2025 13:04 PM

 IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி முதல் சீசன் தமிழில் தொடங்கிய போதே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து சினிமாவில் நல்ல நிலையில் இருந்துவருகிறார்கள். இதன் காரணமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் 9-வது சீசன் சென்று கொண்டிருக்கும் நிலையில் மற்ற மொழிகளிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கு பல டாஸ்குகள் வழங்கப்படும். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நட்பாக இருப்பவர்கள் கூட தொடர்ந்து போட்டிகள் கடினமாக கடினமாக பகையாக மாறுவதையும் மக்கள் பார்த்துள்ளனர். போட்டிப் போட்டு ஜெயிக்கும் போது அதனை பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் கடந்த 3 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடைப்பெற்று வருகின்றது தொடர்ந்து ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வருகிறது.

அரண்மனை டாஸ்கில் வெடிக்காத சண்டை ரேங்கிங் டாஸ்கில் வெடித்தது:

அதன்படி ஒவ்வொரு சீசனிலும் வீட்டில் உள்ள போட்டியாளர்களே தங்களை மதிப்பிட்டு தங்களுக்கான என்னை தேர்ந்தெடுக்குமாறு பிக்பாஸ் அறிவிப்பார். ஆனால் இந்த முறை வீட்டில் உள்ள விக்ரம், கனி மற்றும் அமித் மூன்று பேரையும் நடுவர்களாக அமைத்து மற்ற 14 பேரையும் ரேங்கிங் செய்ய சொல்லியுள்ளார்.

இதில் அவர்கள் மூன்று பேரும் 14 பேரையும் வரிசையாக ரேங்கிங் செய்துள்ளனர். இது போட்டியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை நீங்க முடிவு செய்ய எப்படி முடியும் என்று கேள்வி எழுப்புவதுடன் இதில் உடன்பாடு இல்லை என்றும் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… LIK படம் கடந்து வந்த பாதை என பதிவை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஊர்வசியில் அசத்தலான நடிப்பில்  ஹாட்ஸ்டாரில் இந்தப் அப்பத்தா படத்தை மிஸ் செய்யாதீர்கள்