தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஃபினாலே டாஸ்க்…!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் ஃபைனலிஸ்ட்டுகளாக 4 பேட் உள்ள நிலையில் ஃபினாலே டாஸ்க் இன்று முதல் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஃபினாலே டாஸ்க்...!

பிக்பாஸ்

Published: 

12 Jan 2026 11:16 AM

 IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் தற்போது வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களின் ஆட்டம் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணத்தால் அதனைத் தொடர்ந்து மேலும் 4 போட்டியாளர்கள் வைல்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தனர். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை முன்னதாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ஃபைனலிஸ்டுகளாக 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இந்த சீசனில் 4 பேர் மட்டுமே ஃபைனலிஸ்டுகளாக உள்ளனர்.

அதன்படி மொத்தம் 5 போட்டியாளர்கள் இறுதி வாரத்தில் இருந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதி இந்த சீசனில் 4 பேர் மட்டுமே ஃபனலிஸ்டாக இருக்க முடியும் என்று தெரிவித்ததுடன் வீட்டில் இருந்து சாண்ட்ரா என்ற போட்டியாளர் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் திவ்யா, அரோரா, விக்ரம் மற்றும் சபர் ஆகிய 4 பேர் ஃபைனலிஸ்டாக உள்ளனர்.

தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஃபினாலே டாஸ்க்:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 99-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து இன்றைய நாளிற்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஃபினாலே வாரத்திற்கான முதல் டாஸ்க் நடைபெறுவது குறித்து வெளிப்படையாக தெரிகிறது. இதில் போட்டியாளர்கள் அவர்களின் மனதில் உள்ள உண்மையை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்பதே டாஸ்க். இந்த டாஸ்கை ஃபினாலேவில் உள்ள போட்டியாளர்கள் கலந்துகொண்டு பேசுவது வீடியோவில் தெரிகிறது.

Also Read… பிக்பாஸில் இவங்க தான் டாப் 4 ஃபைனலிஸ்ட் இவர்களதான்… இன்று வெளியேறும் நபர் இவர் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பொங்கல் அன்று ரீ-ரிலீஸாகிறது தளபதி விஜயின் தெறி படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!