பிக்பாஸில் கனி – பார்வதி இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் முடிவடைந்து தற்போது 4-வது வாரம் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த வாரம் தொடங்கிய முதல் நாளே சண்டையும் தொடங்கியது. அதன்படி பார்வதி மற்றும் கனி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸில் கனி - பார்வதி இடையே வெடித்த சண்டை... வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ்

Published: 

27 Oct 2025 11:29 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தொடர்ந்து சண்டைகளும் சலசலப்புகளும் வெடித்துக்கொண்டே இருக்கின்றது. அதன்படி தொடர்ந்து 3 வாரங்கள் முடிவடைந்து தற்போது 4-வது வாரம் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். அதன்படி முதல் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நந்தினி வாக்கவுட் செய்ய அதே வாரம் பிரவீன் காந்தி எவிக்‌ஷனில் இடம் பிடித்து இருந்த நிலையில் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார எவிக்‌ஷன் ப்ராசசில் அப்சரா வெளியேற்றப்பட்டார். பின்பு மூன்றாவது வாரமான நேற்று ஞாயிற்று கிழமை எவிக்‌ஷன் நாமினேஷனில் இடம் பிடித்து இருந்த ஆதிரை குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து 8-வது சீசனில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனில் மூன்றாவது வார இறுதியில் தான் வீட்டில் உள்ள போட்டியாளர்களை நேரடியாக லெஃப்ட் ரைட் வாங்கினார். வாரம் முழுவதும் நடந்த பிரச்னைகளை சுட்டிக்காட்டி அவர்களை நேரடியாக வார்னிங் கொடுத்தார் விஜய் சேதுபதி. பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் இந்த செயல் மக்களிடையே அதிகப் பாராட்டைப் பெற்றது. அதன் படி சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாரத்தின் முதல் நாளே சண்டையுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி:

இந்த நிலையில் இந்த 4-வது வாரத்திற்கான வீட்டு தலையாக பிரவீன் தேர்வாகியுள்ள நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 22-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் அறையில் இருக்கும் பார்வதி பிக்பாஸ் டீலக்ஸ் அறையில் இருக்கும் கனியின் உடைகளைக் கொண்டுவந்து கனியின் கைகளில் கொடுக்காமல் கீழே தறையிலேயே வைத்துவிடுகிறார்.

அதனைக் கேட்டால் டோர் டெலிவெரி என்றால் இப்படிதான் என்று மிகவும் ரூடான முறையில் பேசுகிறார். இதனால் கனி மற்றும் பார்வதி இடையே வாக்குவாதம் முற்றுகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க – பா.ரஞ்சித்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் கவனம் பெறும் பைசன் காளமாடன் படத்தின் மேக்கிங் வீடியோ