பிக்பாஸில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில் புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகையை போட்டியாளர்கள் கொண்டாடும் நிகழ்வு காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களைக் கடந்துள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டு வாரங்களைக் கடந்துள்ளது. அதன்படி மொத்தம் 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியது. சீரியல் பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆடிஷன்கள் நடைபெறும் போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலரும் தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு மக்களிடையே கிடைக்கும் பிரபலம் தாண்டி வெள்ளித்திரையில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கின்றது. இதன் காரணமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலரும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். அதன்படி முதல் வாரம் முடிவதற்கு முன்பே நந்தினி போட்டியில் இருந்து விலகுவதாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல் வார எவிக்ஷனின் இயக்குநர் பிரவீன் காந்தி குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார எவிக்ஷனில் குறைவான வாக்குகளைப் பெற்ற அப்சரா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தீபாவளி கொண்டாட்டத்தில் பிக்ப்பாஸ் போட்டியாளர்கள்:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 15 நாளை எட்டியுள்ளது. அதன்படி இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்தப் போட்டியில் உள்ள போட்டியாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day15 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/sY0F4cVdCw
— Vijay Television (@vijaytelevision) October 20, 2025
Also Read… Vishal: அந்த கதை விஜய்காக எழுதியது… நான் நடித்து மாஸ் ஹிட் கொடுத்தேன் – விஷால் சொன்ன விஷயம்!