Bigg Boss Tamil: பிக்பாஸ் தமிழ் வரலாற்றில்.. அதிகம் டிஆர்பி கொண்ட சீசன் எது தெரியுமா?

Bigg Boss Tamil TRP Ratings: தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரை 8 சீசன்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், தற்போது 9வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியான சீசன்களிலே அதிகம் டிஆர்பி கொண்ட சீசன் எது என்பது பற்றி பார்க்கலாம்.

Bigg Boss Tamil: பிக்பாஸ் தமிழ் வரலாற்றில்..  அதிகம் டிஆர்பி கொண்ட சீசன் எது தெரியுமா?

கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி

Published: 

19 Sep 2025 12:48 PM

 IST

இந்த பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியானது, ஆங்கில மொழியில் வெளியாகிவந்த “பிக் பிரதர்ஸ்” (Big Brothers) என்ற நிகழ்ச்சியை பின்பற்றி ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்தியாவில் கடந்த 2006ம் ஆண்டு இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தற்போது 19 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து 7வது சீசன் வரை உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கினார். அதை அடுத்ததாக பிக்பாஸ் 8வது சீசன் முதல், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார்.

தமிழில் இதுவரை மொத்தமாக 8 சீசன்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க : நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. பிற்பகல் 3 மணிக்கு இறுதி சடங்கு..

இந்த நிகழ்ச்சி வரும் 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியகியுள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியான பிக்பாஸ் சீசன்களில் அதிகம் டிஆர்பி பெற்ற சீசன் எது தெரியுமா? அது என்ன என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன்களில் அதிகம் டிஆர்பி கொண்ட சீசன் எது :

தமிழில் இதுவரை பிக்பாஸ் 8 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இது மக்களிடையே மிகவும் பிரபலமான சீசனாக சீசன் 1, 5 மற்றும் 6 இருந்தது. இதை மக்களிடையே மிகவும் அதிகமாக ஈர்க்கப்பட்ட சீசனாக பிக்பாஸ் சீசன் 6 தமிழ் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : லோகாவில் நஸ்லென் போன்று நானும் நடிக்கிறேன்.. ஆனால் – நடிகர் கவின் பகிர்ந்த விஷயம்!

இந்நிலையில், இதுவரை வெளியான மொத்தம்  8 சீசன்களில், கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிதான் அதிகம் டிஆர்பி பெற்ற சீசனில் ஒன்றாக இருக்கிறதாம். உணர்ச்சிமிகுந்த இந்த பிக்பாஸ் சீசன் 6 தான் தமிழ் டிஆர்பி-யில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்த சீசன்களை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 மற்றும் 7 நிகழ்ச்சியும் இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 9 நியூ ப்ரோமோ நியூ ப்ரோமோ வீடியோ பதிவு :

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி :

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியானது கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டுவந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக, ஷிவின், நந்தினி, அமுதவாணன், ரச்சிதா, மணிகண்டன், தனலட்சுமி, ஜனனி, ஆயிஷா, குயின்சி, கதிரவன், ராபர்ட் மாஸ்டர், விக்ரமன் மற்றும் அசீம் என 21 போட்டியாளர்கள் பங்குபெற்றனர்.

இந்த நிகழ்ச்சியானது எமோஷனல், சண்டைகள் மற்றும் மாறுப்பட்ட சீசனாக இருந்தது. இந்த பிக்பாஸ் சீசன் 6ன் வின்னராக அசீம் டைட்டிலை வென்றார். மேலும் முதல் ரன்னராக விக்ரமன் வெற்றியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.