எம் மகன் படத்தில் அந்த சீன்ல நாசர் சார் நிஜமாவே அடிச்சாரு – நடிகர் பரத்

Actor Bharath: நடிகர் பரத் நடிப்பில் தற்போது மூன்று படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வெளியான எம் மகன் படத்தில் நடந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

எம் மகன் படத்தில் அந்த சீன்ல நாசர் சார் நிஜமாவே அடிச்சாரு - நடிகர் பரத்

எம் மகன்

Published: 

11 Sep 2025 06:30 AM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாய்ஸ். இதில் இளைஞர்கள் பலர் நடிகர்களாக அறிமுகம் ஆனார். அதில் நடிகர் பரத் (Actor Bharath) ஒருவர். அந்த பட்டியளில் இருந்த அனைவரும் பெரிய அளவில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் பரத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் பரத் நாயனகா நடித்த காதல், பட்டியள், அழகா இருக்கிறாய் பயமா இருக்கிறது, எம் மகன், வெயில், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, சேவல், ஆறுமுகம், கண்டேன் காதலை, வானம் என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். இறுதியாக நடிகர் பரத் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்.

இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஹைபர்லிங்ட் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எம் மகன் படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்:

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பரத் எம் மகன் படத்தில் வரும் ஈரல் சாப்பிடும் காட்சி குறித்து பேசியுள்ளார். அதில் படத்தின் இயக்குநர் திருமுருகன் மிகவும் எதார்த்தமான நபர். அதன் காரணமாக அவர் சீன் மட்டுமே சொல்லுவார். அதை நடிகர்கள் விரிவாக செய்ய அவர் அனுமதி கொடுப்பார். அதன் காரணமாக அந்த ஈரல் காட்சியில் நாசர் சார் நான் சாப்பிடலனு அடிக்கும் போது நிஜமாவே அடி விழுந்துச்சு.

அதில் குறிப்பாக நாசர் சார் அடிக்கும் போது குறுக்க வந்து சரண்யா மேடம் அப்பறம் வடிவேலு சார் வந்து தடுப்பாங்க. அவங்களுக்கும் அப்போ அடி விழுந்தது. அது எல்லாமெ ரியல் அடி என்று நடிகர் பரத் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கல்லூரி படத்தில் தமன்னாவை நாயகியாக தேர்வு செய்தது இப்படிதான் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!

நடிகர் பரத்தின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு இதோ:

Also Read… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் ஒன்னா நடிச்சப் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?