வாரண்ட் வெப் சீரிஸ் பார்ப்பதற்கு முன்பு விலங்கு சீரிஸை மிஸ் செய்யாமல் பாருங்கள்

Vilangu Web Series | ஓடிடி கலாச்சாரம் தொடங்கிய பிறகு மக்களிடையே இணையதள தொடர்களை பார்க்கும் பழக்கமும் அதிகரித்து உள்ளது. அதன்படி தமிழ் மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற க்ரைம் த்ரில்லர் தொடர் தான் விலங்கு. இந்த தொடரின் அடுத்த பாகம் தற்போது வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரண்ட் வெப் சீரிஸ் பார்ப்பதற்கு முன்பு விலங்கு சீரிஸை மிஸ் செய்யாமல் பாருங்கள்

விலங்கு

Published: 

11 May 2026 23:36 PM

 IST

தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து படங்கள் வெளியாகி வைரலாகி வருவது போல இணையதள தொடர்களும் தொடர்ந்து வெளியாகி வைர்லாகி வருகின்றது. படங்களைப் போல இணையதள தொடர்களும் ஒவ்வொரு ஜானர்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகும் படங்கள் மற்றும் இணையதள தொடர்களும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இணையதள தொடர் விலங்கு. இந்த இணையதள தொடரை இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்த தொடரில் நடிகர் விமல் கதையின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர்கள் பால சரவணன், இனியா, முனிஷ்காந்த், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி,
ஆர்.என்.ஆர்.மனோகர், ரேஷ்மா பசுபுலேட்டி, ராஜபாண்டி, ரவி, சாய் உமேஷ், யோகி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்த தொடர் ஜீ 5 ஓடிடியில் கடந்த 22-ம் தேதி பிப்ரவரி மாதம் 2022-ம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகமாக வாரண்ட் தொடர் அடுத்ததாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரண்ட் வெப் சீரிஸ் பார்க்க ப்ளான் இருக்கா? அதுக்கு முன்னாடி விலங்கு மிஸ் செய்யாதீர்கள்:

இந்தப் தொடரில் திருச்சியில் ஒரு கிராமத்தில் நடைபெறும் தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக உள்ளார் விமல். தொடர்ந்து அந்த வழக்கை அவர் விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அந்த தகவலின்படி பலரை கொலை செய்த நபர் விமல் உடனே இருந்தவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த தொடரின் தொடச்சியாக அடுத்ததாக வாரண்ட் வெப் சீரிஸ் வருகின்ற 22-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sreeleela: அந்த நடிகைதான் எனக்கு ரோல் மாடல்.. மனம் திறந்து பேசிய ஸ்ரீலீலா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் 55 படத்தில் மம்மூட்டியின் காட்சிகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும்? வைரலாகும் தகவல்

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி