IPL 2026: இறுதியில் மாதவ், அஷுதோஷ் ருத்ரதாண்டவம்.. பஞ்சாப் அணியை பிழிந்த டெல்லி..!
PBKS vs DC Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 11ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் தர்மசாலா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்களில் 211 ரன்களை கடந்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 11ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் தர்மசாலா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்களில் 211 ரன்களை கடந்து வெற்றி பெற்றது. 10 புள்ளிகளைப் பெற்ற ஏழாவது அணியாக டெல்லி உருவெடுத்தது. இது பஞ்சாப் அணிக்கு ஏற்பட்ட நான்காவது தொடர் தோல்வியாகும்.
210 ரன்கள் குவித்த பஞ்சாப்:
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாபின் தொடக்க ஜோடி ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தது. பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா இருவரும் அரைசதம் அடித்தனர். தனது வழக்கமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்த பிரியான்ஷ், 33 பந்துகளில் 169.70 ஸ்டிரைக் ரேட்டில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். கூப்பர் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். அதே சமயம், கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ் 3 சிக்ஸர்களையும் 5 பவுண்டரிகளையும் அடித்தார். டெல்லி அணிக்காக மிட்செல் ஸ்டார்க் மற்றும் மாதவ் திவாரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகேஷ் குமார் 1 விக்கெட்டை எடுத்தார்.
ஒரு கட்டத்தில், 211 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது. கேப்டன் அக்ஸர் படேல் விக்கெட் இழப்பு டெல்லியைத் தோல்வியின் விளிம்பிற்கு சென்றது.




ALSO READ: ’அவன் அப்படியே சாகட்டும்’.. தவறான வார்த்தையை பயன்படுத்தினாரா பத்ரிநாத்..? கிளம்பிய எதிர்ப்பு!
30 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் அக்ஸர் படேல் ஆட்டமிழந்தபோது, 14 ஓவர்களில் டெல்லி அணி 138 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வெற்றி பெற, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குக் கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் தேவைப்பட்டது.
ஆட்டத்தை மாற்றிய மில்லர்-அஷுதோஷ் சர்மா:
கடைசி 5 ஓவர்களில் டெல்லிக்கு 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டேவிட் மில்லரும் அஷுதோஷ் சர்மாவும் அந்தப் பொறுப்பை ஏற்றனர். மில்லர் முதலில் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்தார். ஒரு கட்டத்தில், மில்லர் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார், ஏழு பந்துகள் கழித்து அவர் தனது அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து, டெல்லி அணிக்கு இலக்கை முடித்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது மில்லர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டெல்லியின் சிக்கல்கள் அத்துடன் முடிந்துவிடவில்லை.
ALSO READ: மீண்டும் மீண்டும் விதிமீறல்.. ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!
கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணி 36 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 10 பந்துகளில் அஷூதோஷ் சர்மா 2 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உதவியிடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மாதவ் 8 பந்துகளில் 18 ரன்கள் குவித்தார். கடைசி 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து 211 ரன்கள் என்ற இலக்கை கடக்க உதவினார் ஆசிஃப்.