அதிரடி படத்திற்கு கிடைத்த சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?

Athiradi Malayalam Movie Censor Update Viral On Social Media: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் வினித் ஸ்ரீநிவாசன், டொவினோ தாமஸ் மற்றும் பேசில் ஜோசஃப். இவர்களின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அதிரடி.

அதிரடி படத்திற்கு கிடைத்த சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?

அதிரடி

Published: 

08 May 2026 18:55 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் நடிகர் பேசில் ஜோசஃப். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதே மாதிரி இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்கத்தில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிப்பு மற்றும் இயக்குநர் என இரண்டு வேலைகளையும் செய்து வந்த பேசில் ஜோசஃப் கடந்த சில ஆண்டுகளாக படங்களை தயாரிக்கவும் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகர் பேசில் ஜோசஃப் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் அதிரடி. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் வினித் ஸ்ரீநிவாசன் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகை ரியா ஷிபு இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

அதிரடி என்று பெயர் வைக்கப்பட்டு நடிகர்களின் அறிமுக போஸ்டர் வெளியான போதே ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும் தற்போது படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்று வருகின்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அதிரடி படத்தைப் பார்க்கலாம்:

அதன்படி அதிரடி படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பான சென்சார் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பெயர் தமிழில் வைக்கப்பட்டது மட்டும் இன்றி தமிழ் வைப் அதிகமாக இருக்கும் என்று பேசில் ஜோசஃப் முன்னதாக பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… 300 மில்லியன் பார்வைகளைக் கடந்தது மோனிகா லிரிக்கள் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… KHxRK திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – முழு விவரங்கள் இதோ!

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி