Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

DNA : அதர்வாவின் ‘டிஎன்ஏ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Athrvaa DNA OTT Release Update : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகி மக்களை கவர்ந்த திரைப்படம் டிஎன்ஏ. இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது எந்த ஓடிடியில் வெளியாகிறது என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

DNA : அதர்வாவின் ‘டிஎன்ஏ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம் Image Source: IMDb
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jul 2025 22:04 PM

நடிகர் அதர்வா (Atharvaa) தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இளம் நடிகராகப் பல ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டிஎன்ஏ (DNA). இந்த படத்ததை பிரபல தமிழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில், மான்ஸ்டர் மற்றும் ஒருநாள் கூத்து போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த டிஎன்ஏ திரைப்படத்தில், அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் (Nimisha Sajayan) நடித்திருந்த. இவரின் நடிப்பில் வெளியான இப்படமானது குற்றம் திரில்லர் மற்றும் காதல் போன்ற கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த டிஎன்ஏ படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இப்படம் வெளியாகி கிட்டதட்ட ஒரு மாதமாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்தான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்படமானது வரும் 2025, ஜூலை 19ம் தேதியில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. எந்த ஓடிடியில் வெளியாகிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

இதையும் படிங்க : தனுஷ் – ராஷ்மிகா மந்தனாவின் ‘குபேரா’ – ஓடிடி ரிலீஸ் எப்போது?

டிஎன்ஏ திரைப்படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் :

அதர்வா மற்றும் நிமிஷா சஜயனின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படமானது காதல் மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றம் சார்ந்த படமாக வெளியாகியிருந்தது. அதர்வாவின் நடிப்பில் பல ஆண்டுகளுக்குப் பின் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாகவும் இப்படம் அமைந்திருந்தது.

இந்த படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 8 கோடிகள் கிட்ட வசூல் செய்திருந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இப்படமானது வரும் 2025, ஜூலை 19ம் தேதியில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : கவினுடன் ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. புதிய படத்தின் அப்டேட் இதோ!

அதர்வாவின் டிஎன்ஏ பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு பதிவு ;

டிஎன்ஏ படத்தின் கதைக்களம் :

ஐந்து படத்தில் நடிகர் அதர்வா, காதல் தோல்வியால் குடிக்கு அடிமையாகிறார், அவரை திருத்துவதற்காக அவரின் பெற்றோர் நல்வாழ்வு மையத்திற்கு அனுப்புகின்றனர். அதன் பிறகு அவருக்கு, நடிகை நிமிஷா சஜயனை திருமணம் செய்து வைக்கின்றனர். இவர்களின் திருமணத்திற்குப் பின் இருவரும் நன்றாக இருக்கும் நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறகும். அந்த ஆண் குழந்தையை மர்மமான முறையில் கடத்துகின்றனர். இதில் குழந்தையைத் தேடும் பணியில் நடிகர் அதர்வா இணைகிறார். அந்த குழந்தை கிடைத்ததா ? , அல்லது இல்லையா? என்பதுதான் இப்படத்தின் மைய கதை ஆகும்.