பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களால் ஒரு நாள் நேரு ஸ்டேடியம் நிறையும் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!

Director Ashwath Marimuthu: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ட்ராகன். இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்ற நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களால் ஒரு நாள் நேரு ஸ்டேடியம் நிறையும் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்,

Published: 

29 Jun 2025 15:27 PM

 IST

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Director Ashwath Marimuthu) சமீபத்தில் நடந்த நிகழ்சி ஒன்றில் பங்கேற்றப்போது நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட தற்போது ட்ராகன் படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களைப் போல தண்ணீர் பந்தல் போடுவது என பல சமூகம் சார்ந்த செயல்களில் ஈடுபடவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதே போல ஒரு நாள் நேரு ஸ்டேடியம் முழுவதும் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களின் கூட்டம் நிறைந்து இருக்கும். அதனை நேரில் இருந்து பார்ப்பேன் என்று தெரிவித்தார். இப்படி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசிய வீடியோவை பிரதீப் ரங்கனாதனின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பேச்சு:

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதனின் கூட்டணியில் ஹிட் அடித்தப் ட்ராகன்:

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ட்ராகன். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேசுவரன், கயாடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் நடிகை இவானா கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதை படக்குழு கொண்டாடினர். மேலும் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Sai Abhyankkar: ‘D55 படத்திற்காக ஸ்பெஷல் ஆல்பம் தயாராகிறது’ – ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சாய் அபயங்கர்!
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா !
சிலம்பரசன் – விஜய் சேதுபதியின் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும் – அரசன் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
Thaai Kizhavi: ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு? – எக்ஸ் விமர்சனங்கள் இதோ!
விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
என்னோடு நீ உன்னோடு நான்.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?