6 வருடங்களை நிறைவு செய்த ஓ மை கடவுளே படம்… அசோக் செல்வன் குறித்து நெகிழ்ந்து பேசிய அஸ்வத் மாரிமுத்து
Director Ashwath Marimuthu About Ashok Selvan: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஓ மை கடவுளே. இந்தப் படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அசோக் செல்வன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து
தமிழ் சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஓ மை கடவுளே. ரொமாண்டிக் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ட்ராகன் படமும் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக அறிமுகம் ஆன ஓ மை கடவுளே படம் திரையரங்குகளில் வெளியாகி 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாகவும் நடிகை ரித்திகா சிங் நாயகியாகவும் நடித்து இருந்தார். இந்த நிலையில் படம் குறித்தும் படத்தில் நடித்த நடிகர் அசோல் செல்வன் குறித்தும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அசோக் செல்வன் குறித்து நெகிழ்ந்து பேசிய அஸ்வத் மாரிமுத்து:
அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, ஓ மை கடவுளே வந்து 6 வருஷம் ஆச்சு. நடிகர் அசோக் செல்வன் ஒரு அற்புதமான நடிகர் மட்டுமல்ல, ஒரு அற்புதமான நண்பரும் கூட என்பதால், நான் எப்போதும் அவருக்காக என் முதல் படத்தை உருவாக்க விரும்பினேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஓ மை கடவுளே. நீ இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீ எப்போதும் என் முதல் ஹீரோ என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… கேரியரின் உச்சத்தை விட்டு வந்தாலும்… உதயநிதி பேச்சால் சர்ச்சை – என்ன நடந்தது?
அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s been 6 years of ohmykadavule ♥️ I always wanted to make my first film for @AshokSelvan not just because he is an amazing actor but also an amazing friend ! His trust on me is Ohmykadavule ! I want you to go bigger heights macha and u are always my first hero 🌟 pic.twitter.com/tQbpT5RDEa
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) February 14, 2026