சிம்புவிற்கு அரசன் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர் – வைரலாகும் தகவல்
Silambarasan Movie: நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. இந்த நிலையில் சிலம்பரசனின் 49-வது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அதன்படி நேற்று படத்தில் தலைப்பு அரசன் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் யார் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசன்
நடிகர் சிம்பு (Simbu) தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தினை தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நேற்று 07-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் முன்னதாக பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். அதன்படி இந்தப் படம் வடசென்னை பாகம் இரண்டா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இல்லை என்று வெற்றிமாறன் விளக்கம் அளித்தார்.
மேலும் வடசென்னை படம் நடந்த காலத்தில் தான் இந்தப் படமும் நடப்பது போல எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அப்போ இது எல்சியு மாதிரி இருக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போதே படத்தில் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கிறது என்பது தெரியவரும். இந்த நிலையில் இந்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்க உள்ளது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சிம்புவிற்கு வில்லனாக போவது யார் தெரியுமா?
இந்த நிலையில் இந்தப் படத்தில் கன்னட நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இருவருடன் படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் இதில் யார் நடிப்பார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் முன்னதாக நடிகர் உபேந்திரா கூலி படத்தில் காலீசா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தால் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரிப்பும் என்றும் சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… தாதாசாகேப் பால்கே விருது… ராணுவ தளபதியை சந்தித்த மோகன்லால் பாராட்டு பெற்றார்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Arasan – Talks going on with #Uppendra & #KichchaSudeep to play a Antagonist role in the Film🤜🤛
Promo video expected to release on Oct 16th as Anirudh special & Shooting to kickstart after Diwali🎬#SilambarasanTR will also start Aswath Marimuthu Film in Parallel, after… pic.twitter.com/hO79OAzvvO
— AmuthaBharathi (@CinemaWithAB) October 8, 2025