தல என்று அழைக்காதீர்கள் என சொன்ன அஜித் – ஏ.ஆர்.முருகதாஸின் ரியாக்‌ஷன் என்ன?

AR Murugadoss: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் தீனா. இந்தப் படத்திற்கு பிறகு தான் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்று அழைக்கத் தொடங்கினர். இந்த நிலையில் தற்போது தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என அஜித் கூறியது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளார்.

தல என்று அழைக்காதீர்கள் என சொன்ன அஜித் - ஏ.ஆர்.முருகதாஸின் ரியாக்‌ஷன் என்ன?

அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ்

Published: 

17 Aug 2025 13:30 PM

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தீனா. ஆக்‌ஷன் ட்ராமாக உருவான இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக ஏ.ஆர்.முருதாஸ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் சிறப்பாக இருப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் பதிந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித்தை தல தல என்று அழைத்ததன் மூலம் இந்தப் படத்திற்கு பிறகு அஜித் குமாரை அவரது ரசிகர்களும் செல்லமாக தல என்று அழைக்கத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் உடன் இணைந்து நடிகர்கள் சுரேஷ் கோபி, லைலா, பாலா சிங், வைஷ்ணவி, ஷீலா, ராஜேஷ், ஸ்ரீமன், மகாநதி சங்கர், ஷியாம் கணேஷ், கே.ஆர். வத்சலா, நீலு, கிரேன் மனோகர், பெசன்ட் ரவி, விஜயலட்சுமி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தல பட்டத்தை வேண்டாம் என்று சொன்ன அஜித் – ஏ.ஆர்.முருகதாஸின் ரியாக்‌ஷன்:

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார் ஒரு அறிக்கை ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டு இருந்தார். அதில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜித் குமார் அல்லது ஏகே என்று அழையுங்கள் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் நடிகர்களைக் கடவுள் போல கொண்டாடுவதை விட்டுவிட்டு உங்கள் குடும்பத்தைப் பாருங்கள் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் அஜித் குமாரின் இந்த ஸ்டேட்மெண்ட் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்திற்கு பிறகுதான் இந்த பட்டம் அஜித்திற்கு கிடைத்தது குறித்து பேசிய அவர், நடிகர் அஜித் குமாரின் இந்த அறிவிப்பு அவரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அவர் தனது ரசிகர்களிடம் சொல்ல விரும்புகிறார், நான் வெறும் ஹீரோ என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கங்குவா படத்தில் நடிக்க இதுதான் காரணம் – பாபி தியோல் சொன்ன விசயம்

இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸின் பேச்சு:

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக கலக்கிய படங்களின் லிஸ்ட் இதோ!