இல்லாதவனுக்காக போராடுறவனுக்கு எதிராக இல்லாதவன நிறுத்துரதுதான் அரசியல் – காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

Gods and Soldiers Movie Traiser | தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பணியைத் தொடங்கிய விஜய் மில்டன் தற்போது இயக்குநராகவும் வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் படத்தின் ட்ரைசர் தற்போது வெளியாகி உள்ளது.

இல்லாதவனுக்காக போராடுறவனுக்கு எதிராக இல்லாதவன நிறுத்துரதுதான் அரசியல் - காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் ட்ரைசரை

Published: 

11 Apr 2026 12:34 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியானது காத்திருந்த காதல் என்ற படம். இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் விஜய் மில்டன். தொடர்ந்து பலப் படங்களுக்கு ஒளிபதிவாளராக பணியாற்றி உள்ளார். மேலும் சினிமாவில் ஒளிபதிவாளராக பல சாதனைகளைப் படைத்த விஜய் மில்டன் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறது என்ற படத்தின் மூலமாக தனது இயக்குநர் பணியைத் தொடங்கினார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக இவர் இயக்கிய கோலி சோடா படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இயக்குநராக விஜய் மில்டனுக்கு பெருமையை சேர்த்து தந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இயக்குநராக விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான 10 எண்றதுக்குள்ள, பிரவேகயா, கடுகு, விழித்திரு, கோலி சோடா 2, பைரகீ, மழை பிடிக்காத மனிதன் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார். இது மட்டும் இன்றி கோலி சோடா ரைசிங் என்ற ஒரு இணையதள தொடரையும் விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ்.

காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்:

இந்த காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த கார்ஸ் அண்ட் சோல்சர்ஸ் படத்தில் நடிகர்கள் ராஜ் தருண், பரத், ஆரி அருஜுனன், சுனில், ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், ஜெஃப்ரி, இம்மான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியது மட்டும் இன்றி சினிமாட்டோகிராஃபி மற்றும் தயாரிப்பையும் விஜய் மில்டனே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நான் பைக் ஓட்டும்போது அஜித் சார் எனக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம் இதுதான் – மஞ்சு வாரியர் சொன்ன விசயம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Jana Nayagan: ஜன நாயகன் திரைப்பட இணையத்தில் லீக்.. விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த பிரபலங்கள்!

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?