கனிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுனது இவ்வளவு வைரலாகும் நான் நினைக்கல – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

Director AR Murugadoss: கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ஸ்டார் நடிகர்களின் படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்ப விழாவில் நடனம ஆடியது வைரலான நிலையில் அவர் அதுகுறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

கனிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுனது இவ்வளவு வைரலாகும் நான் நினைக்கல - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

Updated On: 

31 Jul 2025 15:17 PM

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (Director AR Murugadoss) இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான ப்டம் சிக்கந்தர். இந்தி மொழியில் உருவான இந்தப் படத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியா நடித்து இருந்தார். கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான சிக்கந்தர் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி உள்ள படம் மதராஸி. தமிழில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இவர் முன்னதாக தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏஸ் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்த மதராஸி படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வித்யுத் ஜம்வால் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் மற்றும் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில்நடிதுள்ளனர். மேலும் நடிகர்கள் விக்ராந்த், ஷபீர் கல்லாரக்கல், சஞ்சய், பிரேம் குமார் மற்றும் சச்சனா நமிதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த மதராஸி படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கனிமா பாடலுக்கு டான்ஸ் ஆடியது குறித்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்:

அதன்படி அந்தப் பேட்டியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கனிமா பாடலுக்கு டான்ஸ் ஆடியது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ் எனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா ஊரில் நடைப்பெற்றது. அப்போது நான் மதராஸி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தே. விழாவிற்கு முதல் நாள் தான் ஊருக்கு புரப்பட்டு சென்றேன்.

நான் ஊருக்கு போற அன்னைக்கு மதராஸி படத்தின் பாடல் காட்சிகள் தான் படமாக்கப்பட்டது. அப்போ சிவகார்த்திகேயன் கூட நீங்களும் ஒரு டான்ஸ் போடுங்க சார் என்றார். எனக்கு டான்ஸ்லாம் வராது நான் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அன்னைக்கு நைட் ஊருக்கு போன நிகழ்ச்சில டான்ஸ் ஆடனும் சொல்றாங்க.

Also Read… காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!

நான் முடியாதுனு சொல்லியும் என்னைய கட்டாயப்படுத்தி ஆடனும் சொல்லிட்டாங்க. நானும் நம்ம ஃபேமிலி ஆட்கள் தான இருக்காங்கனு ஆடிட்டேன். ஆனா அடுத்த நாள் பாத்தா அது இவ்வளவு வைரலாகிடுச்சு. இவ்வளவு வைரலாகும் தெரிஞ்சு இருந்தா நான் ஆடி இருக்க மாட்டேன் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் சிரித்துக்கொண்டே அந்த பேட்டியில் பதிலளித்தார்.

இணையத்தில் கவனம் பெறும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கலகல பேச்சு:

Also Read… இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!