ஓடிடியில் வெளியானது அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Lockdown Movie Now Streaming On Amazon Prime OTT: பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் லாக்டவுன். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓடிடியில் வெளியானது அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்

லாக்டவுன்

Published: 

12 Mar 2026 13:27 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை அனுபமா பரமேசுவரன். இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகியாக வலம் வருகிறார். தொடர்ந்து நாயகன்களுக்கு ஜோடியாக மட்டும் இன்றி கதையின் நாயகியாகவும் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் நடிகை அனுபமா பரமேசுவரன். அதன்படி மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை அனுபமா பரமேசுவரன் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் அடுத்தடுத்து 6 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த 6 படங்களும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 6 படங்களில் 2 படங்கள் நாயகியை மையமாக வைத்து உருவான படமாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக்டவுன் மையமாக வைத்து உருவான இந்தப் படத்திற்கு லாக்டவுன் என்று டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

அனுபமா பரமேசுவரனின் லாக் டவுன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியான படம் லாக்டவுன். இந்தப் படத்தை இயக்குநர் ஏஆர் ஜீவா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் அனுபமா பரமேசுவரன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மீண்டும் ஒரு இயக்குநரை அறிமுகம் செய்யும் சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் – வைரலாகும் எக்ஸ் பதிவு!

லாக்டவுன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கணவர் சோஹேல் கதுரியாவை விவாகரத்து செய்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..