மலையாள சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தோட்டம்… வைரலாகும் டைட்டில் டீசர் வீடியோ

Thottam Title Reveal Teaser | மலையாள சினிமாவில் நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ் பெப்பே மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படம் தோட்டம். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

மலையாள சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தோட்டம்... வைரலாகும் டைட்டில் டீசர் வீடியோ

தோட்டம்

Published: 

05 Nov 2025 20:48 PM

 IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh). சினிமா குடும்பத்தில் பிறந்த இவர் மலையாள சினிமாவில் தான் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக நாயகியாகவும் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மலையாள சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான படங்கள் வரவேற்பைப் பெறத் தொடங்கியதும் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நாயகியாக அறிமுகம் ஆகி நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால் என அனைவருடனும் ஜோடிப்போட்டு நடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதன்படி தமிழ் சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தோட்டம்:

அதன்படி மலையாள சினிமாவில் நடிகர் ஆண்டனி வர்கீஸ் பெப்பே நாயகனாக நடித்துள்ள படம் தோட்டம். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ரிஷி சிவக்குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தனுஷ் ரசிகர்களுக்கு D 54 படக்குழு வைத்த கோரிக்கை – என்ன தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 15 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் உத்தமபுத்திரன் – கொண்டாடும் ரசிகர்கள்