திருமணம் குறித்த சர்ச்சை – முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!

Anirudh Reacts to Marriage Rumours : கூலி, ஜெயிலர் 2, ஜன நாயகன் என தமிழில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக தனது எக்ஸ் பக்கத்தில் தனது திருமண சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார்.

திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!

அனிருத்

Published: 

14 Jun 2025 21:51 PM

குறுகிய காலகட்டத்திலேயே தமிழின் முன்னணி இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். அனிருத். தமிழில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்டோரின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது இவர் இசையில் தமிழில் கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 ஜன நாயகன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸிற்கு காத்திருக்கின்றன. மேலும் தெலுங்கில் கிங்டம், மேஜிக், தி பேரடைஸ், ஹிந்தியில் கிங் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. அனிருத்தின் திருமணம் குறித்து சமீப காலமாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் மனம் திறந்துள்ளார்.

திருமணம் குறித்து அனிருத் விளக்கம்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தனது எக்ஸ் பக்கத்தில், திருமணமா? பொறுமையா இருங்க… தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அவரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.இந்த நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தான் அனிருத் இந்தப் பதிவை எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அனிருத்தின் எக்ஸ் பதிவு

 

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலக அளவில் பிரபலமானார் அனிருத். தொடர்ந்து தனது பாடல்கள் மூலம் மிக விரைவிலையே தமிழில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத்தின் இசையில் தமிழில் கூலி, ஜெயிலர் 2, ஜனநாயகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்கள் ரிலீஸிற்கு காத்திருக்கின்றன.

அனிருத் இசையில் இந்த ஆண்டு இதுவரை விடாமுயற்சி திரைப்படம் மட்டும் வெளியாகியிருக்கிறது. விடாமுயற்சியின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் படம் கலவையான விமர்சனஙகளையே பெற்றது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்தப் படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை கௌதம் தின்னூரி இயக்கி வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.