‘நீங்க நல்லவர்தான்’ – வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு

Actor Yogi Babu: நடிகர் ரவி மோகன் சமீபத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவன விழாவிற்கு வந்த யோகி பாபுவிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாவனா மரியாதை குறைவாக பேசியதாக அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நீங்க நல்லவர்தான் - வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு

தொகுப்பாளர் பாவனா மற்றும் நடிகர் யோகி பாபு

Updated On: 

31 Aug 2025 12:12 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இவர் நடிகராக மட்டும் இன்றி சினிமாவில் அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார். அதன்படி தற்போது சினிமாவில் படங்களை தாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இதுகுறித்த செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் உட்பட நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெனிலியா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் தொடக்க விழா கடந்த 26-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பிரபலங்கள் நடிகர் ரவி மோகனை வாழ்த்தி பேசியது ஒரு பக்கம் வைரலாகி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாவன நடிகர் யோகி பாபுவிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்ட செயல் இணையத்தில் நெட்டிசன்களை கோவமடைய செய்துள்ளது. அதன்படி மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை பாவனா கீழே அமர்ந்து இருக்கும் விருந்தினர்களிடையே சென்று இங்கு உள்ளவர்களின் மைண்ட் வாஸ் என்ன என்று கேள்வி எழுப்பி வருகிறார். அப்போது நடிகர் சிவகார்த்திகேயனிடம் இந்த கேள்வி கேட்கும் போது அப்படி வெளிப்படையா இங்கு இருக்கவங்க மைண்ட் வாய்ஸ் வெளிய சொல்ல முடியாது என்கிறார். இது அவர் சர்காஸ்டிகா சொன்னாரா இல்ல காமெடியா சொன்னாரா என்று ஒருபுறம் விவாதம் போய் கொண்டு இருக்கிறது.

தொகுப்பாளர் பாவனாவின் பேச்சால் கடுப்பான யோகி பாபு:

இந்த நிலையில் தொடர்ந்து அருகில் இருந்த யோகி பாபுவைப் பார்த்த பாவனா நீங்க எப்போ வந்தீங்க நான் உங்கள பாக்கவே இல்லை என்று அவரிடம் சென்று பேசுகிறார். அப்போது உன் பின்னாடி தான்மா நின்னேன். இந்த பேச்சு ஆரம்பிக்கும் போதே பார்ப்பவர்களுக்கு நன்றாக புரியும் இது ஒரு காமெடியான வாதம் இல்லை என்பது.

அப்போது அசட்டு சிரிப்புடன் யோகி பாபுவிடம் மற்றவர்களின் மைண்ட் வாய்ஸ் வேண்டாம் இப்போ உங்க மைண்ட் வாய்ஸ் என்ன என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த யோகி பாபு சார் நல்லா இருக்கனும் அவர் என்ன வைத்து கூட படம் பண்ணுகிறார். அவர் நல்லா இருக்கனும்னுதான் நினைப்பேன் என்று கூறுகிறார்.

அதற்கு உடனே நல்லவர் மாதிரி பேசாதீங்க என்கிறார். அதற்கு யோகி பாபு நான் நல்லாதான் யோசிக்கிறேன். உன்னமாதிரி நான் பின்னாடி நின்னபோது அவன உள்ள விடாதீங்க உக்கார சேர் கொடுக்காதீங்கனு உன்ன மாதிரி நான் யோசிக்கலனு சொல்ல உடனே பாவனா ஆமா நீங்க ரொம்ப நல்லவர்தான் என்று கூற அத கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொல்லு என யோகி பாபு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் தலைப்பு தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

Also Read… நடிகை சாய் தன்ஷிகாவை விட நடிகர் விஷால் இத்தனை வயது மூத்தவரா?