இந்த வீக்கெண்டில் ஜாலியான படம் பார்க்கனுமா? ஜீ 5 ஓடிடியில் இந்த சூப்பர் சரண்யா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

Super Sharanya: மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் நடிகர் அனஸ்வரா ராஜன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகரக்ளிடையே நல்லவ் அரவேற்பைப் பெற்றப் படம் சூப்பர் சரண்யா. இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த வீக்கெண்டில் ஜாலியான படம் பார்க்கனுமா? ஜீ 5 ஓடிடியில் இந்த சூப்பர் சரண்யா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

சூப்பர் சரண்யா

Published: 

05 Dec 2025 00:45 AM

 IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. காமெடி, ஃபீல் குட், ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஹாரர் என எந்த ஜானரில் வெளியானாலும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சூப்பர் சரண்யா. லவ் காமெடி ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தினை இயக்குநர் கிரிஸ் ஏடி எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் அசோகன், மமிதா பைஜு, நாஸ்லென், ஆண்டனி வர்கீஸ், வினீத் விஸ்வம், சஜின் செருகாயில், வினீத் வாசுதேவன், வருண் தாரா, மணிகண்டன் பட்டாம்பி, பிந்து பணிக்கர், ரோஸ்னா ஜோஷி, கனி குஸ்ருதி, தேவிகா கோபால் நாயர், சினேகா பாபு, சனத் சிவராஜ், ஜிம்மி டேனி, அரவிந்த் இ. ஹரிதாஸ், கீர்த்தனா ஸ்ரீகுமார், ஸ்ரீகாந்த் வெட்டியார், சங்கீத் பிரதாப், பார்வதி அய்யப்பன், ஐஸ்வர்யா ராஜன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஷெபின் பேக்கர் புரொடக்ஷன்ஸ் மற்றும்
ஸ்டக் கௌஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பாளர்கள் ஷெபின் பேக்கர் மற்றும் கிரிஷ் ஏ. டி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

Also Read… வசூலில் ரூபாய் 100 கோடியை எட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்… வைரலாகும் அப்டேட்

சூப்பர் சரண்யா படத்தின் கதை என்ன?

கல்லூரியில் படிக்கும் நடிகை அன்ஸ்வரா ராஜனுக்கு எதுவுமே அவர் நினைப்பது போலவே நடக்காது. தொடர்ந்து வருத்தமாகவே இருக்கும் சூப்பர் சரண்யாவை கல்லூரியில் கூட படிக்கும் பையன் முதல் ஆசிரியர் வரை வரிசைக்கட்டி காதலிக்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு எதிர்பாராத விதமாக அர்ஜுன் அசோகனை அனஸ்வராஅ ராஜன் சந்திக்கிறார். இவர்கள் இடையே காதல் ஏற்படுகின்றது. அதில் அனஸ்வராவின் வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது. இந்தப் படம் தற்போது ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… கோலிவுட் முதல் பாலிவுட் வரை நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

ஹைதராபாத்தில் மேலும் ஒரு திரைப்பட நகரம் - வெளியான அறிவிப்பு
தமிழ்நாட்டில் கட்டப்பட்ட உலகின் முதல் ஏலியன் கோவில் - அப்படி என்ன ஸ்பெஷல்?
தடைகளை வென்று மருத்துவரான 3 அடி மனிதர் - அவரது வெற்றிக்கான காரணம் இதுதான்
இறந்த பிறகும் 57 வருடங்களாக எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்