Jana Nayagan: ஜன நாயகன் பட ஓடிடி உரிமையை ரத்து செய்த அமேசான் பிரைம்? – வைரலாகும் தகவல்!
Jana Nayagan OTT Rights Cancelation: தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படம் பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்துவருகிறது. இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது அதை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

ஜன நாயகன்
நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் மிகவும் பிரம்மாண்ட படமாக தயாராகியிருப்பதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படம்தன் அவரின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் என்ற நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இப்படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவேண்டியிருந்த நிலையில், படமானது சென்சார் பிரச்சனையின் (Censor Issue) காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதன் சென்சார் விவகாரம் கிட்டத்தட்ட ஒருமாதமாக நீடித்த நிலையில், படத்தின் மறு ரிலீஸ் தேதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இதன் சென்சார் வழக்கு எல்லாமே நிறைவடைந்த நிலையில், தற்போது 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நெருங்கியுள்ளது. தேர்தல் நெருங்கிய நிலையில் அரசியல் பேசும் அல்லது அரசியல் தொடர்பான கதைகள் கொண்ட திரைப்படமானது வெளியாகாது என கூறப்படுகிறது.
அந்த விதத்தில் தேர்தல் ஆணையம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தால்தான் மட்டுமே, தேர்தலுக்கு முன் வெளியாகும். அந்த வகையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி (Amazon Prime Video OTT) நிறுவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த உரிமையை நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற யூத் படக்குழு – வைரலாகும் பதிவு!
ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை :
தளபதி விஜய் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்திருக்கிறார். அந்த விதத்தில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிறுவனம் இதன் ஓடிடி உரிமையை பெற கிட்டத்தட்ட ரூ 150 கோடிகளுக்கு மேல் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் இதுதான்… போஸ்டர் வெளியிட்ட படக்குழு
அந்த விதத்தில் இப்படம் கிட்டத்தட்ட ரூ 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 2 மாதங்கள் கடந்தும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தீயாக பரவிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, இது குறித்து படக்குழுவும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
Buzz — It is reported that the Amazon Prime deal for the film #JanaNayagan has been terminated. #ThalapathyVijay pic.twitter.com/r38mnjeuOS
— Movie Tamil (@_MovieTamil) March 24, 2026
ஜன நாயகன் படமானது முற்றிலும் கமர்ஷியல் கதையில் தயாராகியுள்ள நிலையில், பாபி தியோ, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் கிட்ட நெருங்கிய நிலையில், தேர்தலுக்கு பிறகே ஜன நாயகன் படம் வெளியாகி அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.