IPL 2026: காயத்தால் தவிப்பு? பயிற்சி மேற்கொள்ளாத பும்ரா.. அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!
Jasprit Bumrah Injury: ஐபிஎல் 2026-க்காக பங்கேற்கும் 10 அணிகளின் வீரர்களும் ஏற்கனவே பயிற்சியைத் தொடங்கிவிட்னர். இருப்பினும், கிடைத்த தகவல்களின்படி, ஜஸ்பிரித் பும்ரா தற்போது கர்நாடகாவில் உள்ள பிசிசிஐ 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்'-இல் இருக்கிறார். இதன் காரணமாக, பும்ரா இன்னும் பயிற்சி முகாமில் சேரவில்லை.
ஐபிஎல் (IPL 2026) தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை பதற்றமடையச் செய்யும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி குறித்து இன்னும் தெளிவு இல்லை. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை வருகின்ற 2026 மார்ச் 29ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
ALSO READ: மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய சர்ச்சை – கேப்டன் பதவியில் இருந்து விலகும் ஹர்திக்? ரோகித் காரணமா?
ஜஸ்பிரித் பும்ரா:
உலகின் மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா, தனது பந்துவீச்சு மற்றும் யார்க்கர்கள் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் கூட பும்ரா பந்துவீச்சை விளையாட தயக்கம் கொள்வார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் இன்னும் மும்பை அணியில் இணையவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டிலிருந்து ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாத மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, பும்ராவின் காயம் மற்றும் உடற்தகுதி மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.




பயிற்சி மேற்கொள்ளாத பும்ரா:
ஐபிஎல் 2026-க்காக பங்கேற்கும் 10 அணிகளின் வீரர்களும் ஏற்கனவே பயிற்சியைத் தொடங்கிவிட்னர். இருப்பினும், கிடைத்த தகவல்களின்படி, ஜஸ்பிரித் பும்ரா தற்போது கர்நாடகாவில் உள்ள பிசிசிஐ ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’-இல் இருக்கிறார். இதன் காரணமாக, பும்ரா இன்னும் பயிற்சி முகாமில் சேரவில்லை. இருப்பினும், பும்ரா ஏதேனும் காயத்தால் அவதிப்படுகிறாரா அல்லது வழக்கமான பரிசோதனைக்காக அங்கு சென்றிருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை
ஜஸ்பிரித் பும்ரா 2013 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 145 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட 183 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
சாம்பியன் பட்டத்தை வெல்லுமா மும்பை..?
ஹர்திக் பாண்டியா 2024 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2024ல் மும்பை அணி புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தில் இருந்தது. கடந்த 2025ம் ஆண்டு, அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது, ஆனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த 5 ஐபிஎல் பட்டங்களையும் மும்பை அணி, ரோஹித் சர்மா தலைமையின் கீழ் வென்றது.
ALSO READ: ரோஹித்துடன் தொடக்கம் யார்..? அசைக்க முடியாத மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு விவரம்:
ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மிங்கே, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரியான் ரிக்கெல்டன், டேனிஷ் மாலேவார், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், நமன் தீர், அதர்வா அன்கோலேகர், கார்பின் ஷர்வா அன்கோலேகர், ஜாக்ஸ் போஷான், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், மயங்க் மார்கண்டே, அஷ்வினி குமார், தீபக் சாஹர், ரகு சர்மா, முகமது இசார், அல்லா கஃபன்ஜர்.