Ajith Kumar: துப்பாக்கி சூடு பயிற்சியில் அஜித் குமார் தீவிரம்… வைரலாகும் வீடியோ இதோ!
Ajith Kumar Gun Shooting Practice: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் கடந்த 2024ம் ஆண்டு முதல் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் கார் ரேஸ் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவந்த நிலையில், தற்போது மேலும் துப்பாக்கி சூடு பயிற்சியில் இறங்கியுள்ளார்.

அஜித் குமார்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). கடந்த 2024 ஆம் ஆண்டில் இவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் , இந்த 2025ம் ஆண்டில் மட்டும் விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என 2 படங்களில் வெளியாகியிருந்தது. இதில் இந்த குட் பேட் அக்லி படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வெற்றிப் படமாகவும் அமைந்தது. இந்த படங்களின் வெளியீட்டிற்கு முன்னதாகவே கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் இறங்கியிருந்தார். இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெறும் 24H கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியுடன் கலந்துகொண்டிருந்தார்.
இதில் 4 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது கார் ரேஸை தொடர்ந்து, தற்போது துப்பாக்கி சூட்டி பயிற்சியில் அஜித் குமார். தீவிரமாக இறங்கியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் அஜித் குமார் துப்பாக்கி சூடு பயிற்சி (Gun Shooting practice) எடுப்பதுபோன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: விஜயின் நடிப்பில் வெளியாகி 14 வருடத்தை நிறைவு செய்கிறது வேலாயுதம் படம்!
இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் துப்பாக்கி சூடு பயிற்சி வீடியோ :
That GUN Handling Style 🤩✨#AjithKumar pic.twitter.com/nDz02ZIHMs
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 26, 2025
இந்த வீடியோவில் உதவியாளர் ஒருவருடன் நடிகர் அஜித் குமார் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபடுவது போல உள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க – பா.ரஞ்சித்
இவர் கார் ரேஸில் ஈடுபட்டிருந்த நிலையில், எவ்வாறு தற்போது துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். ஒருவேளை, கார் ரேஸ் போட்டிகளை தொடர்ந்து, துப்பாக்கி சூடு தொடர்பான போட்டிகளிலும் அஜித் குமார் கலந்துகொள்ள உள்ளாரா ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் குமாரின் புதிய திரைப்படம் :
குட் பேட் அக்லி படத்தை அடுத்ததாக நடிகர் அஜித் குமார் மீண்டும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது தற்காலிகமாக AK64 என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள நிலையில், ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படமானது ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்துவரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.