Ajith Kumar : இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!

Ajith Kumars Viral Speech: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பை கடந்து, இந்தியாவிற்காக பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய அஜித், மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Ajith Kumar : இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்..  மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!

அஜித் குமார்

Published: 

31 Aug 2025 16:16 PM

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராகவும், இந்தியாவின் சிறந்த கார் ரேஸர்களில் (Car Racer) ஒருவராகவும் இருந்து வருகிறார். இவர் இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெறும், கார் ரேஸ் பந்தயத்தில் தனது அணியினருடன் கலந்துகொண்டு வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்ற நிலையில், இவருக்கு ஒட்டுமொத்த தமிழ் , தெலுங்கு மற்றும் பல்வேறு மொழி ரசிகர்கள் அதிகம். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது கடந்த 2025ம் ஆனது ஏப்ரல் மாதத்தில் வெளியானது. இந்த படமானது உலகளவில் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது.

அதை தொடர்ந்து தற்போது முழுமையாக அஜித் குமார் கார் ரேஸில் இறங்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களிடம் பேசிய அஜித் குமாரின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில், “இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கணும்.. இந்தியாவும் F1 உலக சாம்பியனை வெல்லும்” என பேசியுள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 14 ஆண்டுகளை நிறைவு செய்தது அஜித் குமாரின் மங்காத்தா படம் – கொண்டாட்டத்தில் படக்குழுவினர்

கார் ரேஸ் குறித்து அஜித் குமார் பேசிய விஷயம் :

அந்த வீடியோவில் ரசிகர்களிடையே பேசிய அஜித் குமார், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில், ” நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரொம்ப சுலபம்னு நினைக்கிறாங்க. எனக்காக அல்ல, மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கணும். உடல் ரீதியாகவும் சரி, உணர்ச்சி ரீதியாகவும் சரி, இது எவ்வளவு கடினமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்க.

இதையும் படிங்க : ‘நீங்க நல்லவர்தான்’ – வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு

நம்மகிட்ட நிறைய இந்திய ரேஸர்கள் இருக்காங்க, ஒருவேளை, ஒரு நாளில் இந்தியாவும் F1 உலக சாம்பியனை வெல்லும்” என நடிகர் அஜித் குமார் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். ரசிகர்களுக்கு, இந்திய மக்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் விதத்தில் அஜித் குமார் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பேசிய வைரல் வீடியோ பதிவு :

நடிகர் அஜித் குமார், குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK 64 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகவும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.