மலையாளம் டூ தமிழ் சினிமா.. மணிரத்னம் இயக்கத்தில் 3 படங்களில் நடித்த இந்த சிறுமி எந்த நடிகை தெரியுமா?

Malayalam Actress childhood photo: சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அடையலாம் தெரியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருவது உண்டு. அந்த விதத்தில் மலையாளம் டூ தமிழ் சினிமாவில் லீட் நாயகியாக நடிக்கும், இந்த சிறுமி எந்த நடிகைனு தெரிகிறதா?. விவரமாக பார்க்கலாம்.

மலையாளம் டூ தமிழ் சினிமா.. மணிரத்னம் இயக்கத்தில் 3 படங்களில் நடித்த இந்த சிறுமி எந்த நடிகை தெரியுமா?

மலையாள நடிகையின் சிறுவயது புகைப்படம்

Published: 

09 May 2026 08:39 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்துவருகிறார்கள். அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கமே. அந்த வகையில் மேலே இருக்கும் போட்டோவில் இருக்கும் குழந்தை செலிபிரிட்டி யாருனு தெரியுமா?. இவர் எந்தவித சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர் இவர். இவர் மருத்துவர், மலையாளம் சினிமாவின் (Malayalam Cinema) மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு தமிழில் ரசிகர்களும் அதிகம். இவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan), நிவின் பாலி (Nivin Pauly), டோவினோ தாமஸ் (Tovino Thomas) போன்ற பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ள, மேலும் தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கிட்டத்தட்ட 3 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

அதில் இரு படங்கள் கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சிலம்பரசனுக்கு தங்கையாகவும் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தற்போது எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. மேலும் இவர் இறுதியாக சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்போது இந்த நடிகை யாருனு தெரிந்திருக்கும். இவர் வேறுயாருமில்லை, நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிதான்.

இதையும் படிங்க: நான் ஹீரோவாகும் முன்னே அந்த வேலைதான் பார்த்தேன் – நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி குறித்த போட்டோஷூட் பதிவு:

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி சினிமா பயணம்:

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி முழுமையான மலையாளம் பெண். இவர் கேரளாவில், திருவனந்தபுரத்தில் கடந்த 1991 செப்டம்பர் 06ம் தேதியில் பிறந்தவர். இவர் கடந்த 2017ம் ஆண்டில் நிவின் பாலிக்கு ஜோடியாக Njandukalude Nattil Oridavela என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அதே ஆண்டில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக “மாயநதி” என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இந்த் படத்தில் டோவினோ தாமஸுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து பிரபலமாக பேசப்பட்டிருந்தார். இந்த இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆக்ஷன் என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: ராம் சரணின் பெத்தி பட ஷூட்டிங்கை பார்வையிட்ட சிரஞ்சீவி… BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!

இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் இரண்டாவது படத்திலே தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம்தான் ஜகமே தந்திரம். இதையடுத்து பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ல் படத்தில் பூங்குழலி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் மூன்றாவதாக தக் லைஃப் படத்தில் சிலம்பரசனின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் சூரிக்கு ஜோடியாக மாமன் என்ற படத்தில் நடித்து மேலும் வரவேற்கப்பட்டார். தற்போது இவர் கட்டா குஷ்தி பார்ட் 2 படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி