இதயம் முரளி படம் மிகவும் ஜாலியாக இருக்கும் – நடிகர் அதர்வா

Adharvaa Murali talks about Idhayam Murali Movie: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. இவர் தற்போது நடித்து வரும் இதயம் முரளி படம் குறித்தும் அந்தப் படம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இதயம் முரளி படம் மிகவும் ஜாலியாக இருக்கும் - நடிகர் அதர்வா

இதயம் முரளி

Updated On: 

04 Mar 2026 07:47 AM

 IST

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. இவரது தந்தை முரளி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவடது மறைவிற்கு பிறகு தற்போது நடிகர் அதர்வா முரளி தந்தையின் பெயரைக் காப்பாற்றும் மகனாக வலம் வருகிறார். அதன்படி நடிகர் அதர்வா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக அதர்வா முரளி பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்து இருந்தார். அந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பராசக்தி படத்தை தொடர்ந்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி வரும் படம் இதயம் முரளி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இதயம் முரளி படம் குறித்து நடிகர் அதர்வா முரளி சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகிவ் அருகின்றது.

இதயம் முரளி படம் மிகவும் ஜாலியாக இருக்கும்:

இதயம் முரளி ஒரு லேசான, வேடிக்கையான படமாக இருக்கும். காதலுக்கான வரையறை இப்போது மாறியிருக்கலாம், ஆனால் உணர்ச்சிகள் அப்படியே இருக்கின்றன. 90களில், எப்போதும் ஒரு குறிப்பிட்ட தயக்கம் இருந்தது, குறிப்பாக காதலை வெளிப்படுத்தும் போது. இந்தப் படம் ஒரு சுவாரஸ்யமான கருத்தை கூறுகிறது. 90களின் மனநிலையைக் கொண்ட ஒரு பையன், தன் காதலை ஒப்புக்கொள்ள வெட்கப்பட்டு தயங்குகிறான், இன்றைய நவீன உலகில் வாழ்ந்தால் என்ன செய்வது என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று அதர்வா முரளி தெரிவித்துள்ளார்.

Also read… என்னோடு நீ உன்னோடு நான்.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

இணையத்தில் வைரலாகும் அதர்வா முரளி பேச்சு:

Also read… விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்