காலையில் கணவர்… மாலையில் மனைவி… ஜன நாயக கடமையை ஆற்றிய நடிகை ஷாலினி அஜித் குமார்

Actress Shalini Ajith Kumar Cast Vote: தமிழக சட்டமன்ற தேர்தலில் இன்று காலை முதலே தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் காலையிலேயே கணவர் அஜித் குமார் வாக்கினை செலுத்திய நிலையில் மாலையில் வந்து நடிகை ஷாலினி அஜித் குமார் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

காலையில் கணவர்... மாலையில் மனைவி... ஜன நாயக கடமையை ஆற்றிய நடிகை ஷாலினி அஜித் குமார்

நடிகை ஷாலினி அஜித் குமார்

Published: 

23 Apr 2026 19:09 PM

 IST

தமிழகத்தில் நாடு முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. 5 வருடங்களுக்கு ஒரு முறை இந்த தேர்தல் நடைபெறும் நிலையில் மக்கள் அனைவரும் ஜன நாயக முறைப்படி தங்களுக்கு பிடித்த நபர்களை தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த நபர்களின் கட்சி சின்னத்திற்கு தங்களது வாக்கினை செலுத்துவார்கள். அந்த வகையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்பதனை முடிவு செய்வதற்காக மக்கள் அனைவரும் இன்று தங்களது ஜன நாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். சாதாரண மக்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். அதில் இன்று காலை வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வந்து முதல் ஆளாக தனது வாக்கை செலுத்தினார் நடிகர் அஜித் குமார்.

அதனைத் தொடர்ந்து பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். மேலும் நடிகர் அஜித் குமார் பேசாத விசயத்தை பேசியதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து அவரது அஜித் குமாரின் மேனேஜர் அதனை மறுத்துவிட்டார். இதனால் சற்று நேரம் பரபரப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயக கடமையை ஆற்றிய நடிகை ஷாலினி அஜித் குமார்:

இந்த நிலையில் முன்பு எல்லாம் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்த கணவன் மற்றும் மனைவி சங்கிதமாக அஜித் குமார் மற்றும் ஷாலினி அஜித்குமார் இருவரும் ஒன்றாக வந்து வாக்கை செலுத்துவார்கள். ஆனால் இன்று ஷாலினி மாலை நேரத்தில் வந்து தனது வாக்கை செலுத்தியுள்ளார். இதில் நடிகை ஷாலினி அஜித்தும் தனது கணவர் போல வெள்ளை நிற உடையில் வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… தமிழகத்தில் ஜன நாயகக் கடமையை ஆற்றிய உச்ச நடிகர்கள்… யார் யார் என்று தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… குடிமக்கள் தற்போது குடிகார மக்கள்.. ஓட்டு போட வந்து கொந்தளித்த சிவக்குமார்

Follow Us
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?