வெற்றிமாறன் எந்த கேரக்டருக்காகவும் என்னை பாராட்டியது இல்லை… ஆனால் – ஆண்ட்ரியா சொன்ன விசயம்
Actress Andrea Jeremiah: தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றி மாறன் குறித்து ஆண்ட்ரியா பேசியது வைரலாகி வருகின்றது.

ஆண்ட்ரியா மற்றும் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட், பாடகி மற்றும் நடிகை என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பலப் படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா. நடித்தால் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் தொடர்ந்து கதைக்கு மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா தற்போது வில்லியாக நடித்துள்ள படம் மாஸ்க்.
இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடித்துள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிந்தது. அதன்படி படம் வருகின்ற 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்த்து வியந்த வெற்றிமாறன்:
அதன்படி பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, இதுவரை எனது படங்களில் எனது கதாப்பாத்திரத்தைப் பார்த்து பாரட்டியதே கிடையாது. ஆனால் பிசாசு 2 படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு கால் செய்து மிகவும் எமோஷ்னலாக பேசினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது என்றும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தை இயக்குநர் மிஷ்கின் மிகவும் சிறப்பாக எடுத்து இருந்தார். அதுவும் கடைசிப் பத்து நிமிடங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மழைக்கு கோரிக்கை வைத்த நடிகர் ஆர்யா… வைரலாகும் போஸ்ட்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Andrea: #Pisasu2 is my best work. VetriMaaran sir didn’t complemented me for any roles. But after watching Pisasu2 he called me & got emotional🥺#VetriMaaran: Mysskin has done #Pisasu2 so beautifully. It also has same kind of emotion on last 10 Mins🫶❣️ pic.twitter.com/HDvabj6rhA
— AmuthaBharathi (@CinemaWithAB) November 13, 2025
Also Read… அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – நடிகர் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி