3BHK Movie : சித்தார்த்- சரத்குமாரின் ‘3பிஎச்கே’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!
3BHK Movie Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்து வருபவர்கள் சித்தார்த் மற்றும் சரத்குமார். இவர்கள் இருவரின் கூட்டணியில் மிகவும் மாறுபட்ட திரைக்கதையில் உருவாகியுள்ள படம் 3பிஎச்கே. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

3BHK திரைப்படம்
தமிழ் சினிமாவில் 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபல ஹீரோவாக வலம் வந்தவர் சரத்குமார் (Sarathkkumar) . இவரின் நடிப்பில் பல்வேறு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அதை தொடர்ந்து சமீப ஆண்டுகளாகத் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் 3பிஎச்கே (3BHK). இந்த படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை தேவயானி (Deviyani) நடித்துள்ளார். இவர்களின் ஜோடி பல ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் சரத்குமாரின் மகனாக சித்தா நடிகர் சித்தார்த் (Siddharth) நடித்துள்ளார். மேலும் நடிகை மீதா ரகுநாத், யோகி பாபு மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தைப் பிரபல இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இவர் தமிழில், எட்டு தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்த 3பிஎச்கே திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படமானது முற்றிலும் ஃபீல் குட் குடும்ப திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சரத்குமாரின் மகனாக சித்தார்த் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகப்படுத்தியுள்ளது . இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3பிஎச்கே படக்குழு வெளியிட்ட பதிவு :
Come and experience the story of our family in theaters on July 4th. ✨️#3BHK #Siddharth @realsarathkumar @sri_sriganesh89 #Devayani @RaghunathMeetha @Chaithra_Achar_ @iamarunviswa @dineshkrishnanb #JithinStanislaus @amritramnath23@thecutsmaker @Meevinn @ashokstylist… pic.twitter.com/uY6WLrOSzk
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 13, 2025
சரத்குமாரை மற்றும் சித்தார்த்தின் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ளது. இந்த படமானது முற்றிலும் குடும்ப கதைக்களத்துடன், கிராமத்தில் இருந்து சிட்டி நோக்கி வந்த குடும்பத்தைப் பற்றியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் தேவயானி கணவன் மனைவியாக நடித்துள்ளார்கள். மேலும் அவர்களின் பிள்ளைகளாக நடிகர் சித்தார்த் மற்றும் குட் நைட் பிரபல நடிகை மீதா ரங்கநாத் இணைந்து நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமான நிலையில், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருந்தது. அதைதொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்துதான் தற்போது படக்குழு ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தார்த்தின் சித்தா படத்திற்குப் பின் இந்த 3பிஎச்கே படமானது வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.