புத்தாண்டு கொண்டாட்டங்களில் பலர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில், சிலர் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து உழைத்து கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் இருந்த ஒருவர்தான் ஈட் கிளப்பில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் பிட்டு, புத்தாண்டு இரவு சுமார் 8 மணியளவில் உணவு ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்ய சென்றுள்ளார். சுமார் 90 நிமிடங்கள் கழித்து பிட்டு வந்திருக்கிறார்.