ஐபிஎல் தொடரின் பிரபல அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சமீப காலமாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 2026 ஐபிஎல் ஏலத்தில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானை 9 கோடிக்கு கேகேஆர் அணி வாங்கியதுதான் இதற்குக் காரணம். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களின் பின்னணியில், முஸ்தபிசூர் ரஹ்மானை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து, கேகேஆர் உரிமையாளர் என அறியப்படும் நடிகர் ஷாருக் கான் அவரை ஏன் வாங்கினார் என்ற கேள்விகளும் எழுந்தன.