கரூரில் விஜயின் பரப்புரையில் நேர்ந்த சோகம் – வேதனை தெரிவிக்கும் நடிகர்கள்

VIjay Campaign: நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று கரூரில் நடைப்பெற்ற விஜயின் பிரச்சார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் விஜயின் பரப்புரையில் நேர்ந்த சோகம் - வேதனை தெரிவிக்கும் நடிகர்கள்

விஜய்

Published: 

28 Sep 2025 11:09 AM

 IST

நடிகர் விஜய் (Actor Vijay) கட்சி தொடங்கி தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கி உள்ளார். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட முடிவு செய்து தொடர்ந்து செய்து வந்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார் நடிகர் விஜய். அந்த வரிசையில் நேற்று செப்டம்பர் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார் விஜய். நாமக்கல் முடிந்தது கரூரில் விஜயின் பரப்புரை நடந்துகொண்டு இருந்தபோது பலர் மயக்கமடைந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.

அவர்களை மருத்துமவனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கரூர் பிரச்சாரத்தில் பலர் உயிரிழ்ந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பிரபலங்கள் பலர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கலையும் ஆருதலையும் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்தின் இரங்கல் பதிவு:

கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என்று தெரிவித்து இருந்தார்.

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட இரங்கல் பதிவு:

இந்தச் செய்தியைக் கேட்டு வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்து இருந்தார்.

நடிகர் விஷால் வெளியிட்ட இரங்கல் பதிவு:

முழுக்க முழுக்க முட்டாள்தனம். நடிகர்/அரசியல்வாதி விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனதை வேதனைப்படுத்துகிறது, முற்றிலும் சரியல்ல. அப்பாவி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது, மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Also Read… நானியின் பாரடைஸ் படத்தில் இணைந்த நடிகர் மோகன் பாபு

நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று கார்த்தி தெரிவித்து இருந்தார்.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் AK64 படத்தின் பணிகள் – வைரலாகும் போட்டோ!