கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல… 21 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் சச்சின் படம்!

21 Years Of Sachein Movie: தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றப் படம் சச்சின். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல... 21 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் சச்சின் படம்!

சச்சின் படம்

Published: 

15 Apr 2026 18:58 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 14-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சச்சின். இந்தப் படத்தை இயக்குநர் ஜான் மகேந்திரன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஜெனிலியா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்த சச்சின் படட்தில் நடிகர்கள் பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய், தாடி பாலாஜி, சாம்ஸ், மோகன் சர்மா, பேபி ஷர்மி, மயில்சாமி, ரஷ்மி முரளி, சித்ரா ரங்கவாசன், லிண்டா ஆர்செனியோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்த சச்சின் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேசன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைபுலி தாணு தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சச்சின் படம் திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு படக்குழு கொண்டாடி வருகின்றது.

21 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் சச்சின் படம்:

அதன்படி கல்லூரியில் ஒன்றாக படிக்கும் விஜய் மற்றும் ஷாலினி இடையே காதல் ஏற்படுகின்றது. ஆனால் இருவருக்கும் இடையே இருக்கும் செல்லமான சண்டை காரணமாக ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை சொல்லாமலே இருக்கின்றனர். இறுதியில் இவர்கள் இருவரும் கல்லூரி முடிந்து பிரிய வரும் வேலை என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

Also Read… அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்

சச்சின் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி