சூர்யாவின் கேரியரை மாஸாக மாற்றிய நந்தா படம்… திரையரங்குகளில் வெளியாகி 24 வருடங்களை நிறைவு செய்தது!
24 Years Of Nandha Movie: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு உயர்த்தியது நந்தா படம். இந்த நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்

சூர்யா
தமிழ் சினிமாவில் கடந்த 14-ம் தேதி நவம்பர் மாதம் 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நந்தா. இயக்குநர் நந்தா எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா (Actor Suriya) நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை லைலா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், சரவணன், கருணாஸ், வினோத், ராஜஸ்ரீ, ஷீலா, தஞ்சை ராமசாமி, நந்தா சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஈழம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்ட நேரத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தை பிரபல தயரிப்பு நிறுவனமான அபரஜீத் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு, கார்த்திக் ராதாகிருஷ்ணன், வெங்கி நாராயணன், ராஜன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவை சினிமாவில் உயர்த்திய நந்தா படம்:
தமிழ் சினிமாவில் 1997-ம் ஆண்டு முதல் நடிகராக அறிமுகம் ஆன நடிகர் சூர்யா தொடர்ந்து 2001-ம் ஆண்டு வரை 7 படங்களில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் சூர்யா என்ற தனி ஒருவருக்கான அங்கீகாரம் என்பது கிடைக்காமலே இருந்தது. இந்த நிலையில் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை உயர்த்துவதற்காகாகவே அவரைத் தேடிவந்த வாய்ப்புதான் நந்தா.
Also Read… சலிப்பே தட்டாத வாரணம் ஆயிரம்.. 17 ஆண்டுகளை கடந்தும் எவர்கிரீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்தப் படத்தில் மிகவும் வித்யாசமான தோற்றத்தில் ஜிம் பாடியுடன் சூர்யாவின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்து வந்த சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியதில் முதல் பங்கு நந்தா படத்திற்குதான். இதனை சூர்யாவே பல இடங்களில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
இந்த நந்தா படத்திற்கு பிறகே சூர்யாவால் ஆக்ஷன் கதாப்பாத்திரமும் நடிக்க முடியும் என்று சினிமா வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு புரிந்தது. அதன் பிறகே நடிகர் சூர்யாவிற்கு தொடர்ந்து ஆக்ஷன் படங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்த இந்த நந்தா படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Also Read… அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்னை… பிக்பாஸில் பார்வதிக்கு இதுதான் பிரச்னையா? – வைரலாகும் வீடியோ